[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

மிரட்டிய இம்ரான் தாஹிர் - அசத்தலாக ரிவ்யூ கேட்ட தோனி

ipl-cricket-2019-dhoni-s-smart-review

ஐபிஎல் போட்டியில் சென்னை கேப்டன் தோனி அசத்தலாக ரிவ்யூவை பயன்படுத்தியுள்ளார்.

12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் ஆர்.சி.பி அணியும் மோதுகின்றனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய ஆர்சிபி அணியின் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் துவக்கம் முதலே திணறினார்கள். ஆடுகளத்தில் பந்துகள் சரியாக பேட்டிங் செய்ய ஏதுவாக எழும்பவில்லை. இதனால் தொடக்கம் முதலே ஆர்சிபி அணி திணறியது.  ஆடுகளத்தின் தன்மையைறிந்த தோனி இரண்டாவது ஓவரை ஹர்பஜன் சிங்கிற்கு அளித்தார். 

இது ஆட்டத்தில் நல்ல திருப்பமாக அமைந்தது. ஹர்பஜன் சிங்கின் சுழலில் கோலி 6 ரன்களுடனும், ஏபிடிவில்லியர்ஸ் மற்றும் மோயின் அலி 9 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். அத்துடன் சிமரான் ஹெர்ட்மேயரும் வந்தவேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய இளம் வீரர் சிவம் தூபே 2 ரன்கள், காலின் ட்கராண்ட்ஹோம் (4) ரன்களுடன் வெளியேறினர். 

அதன்பின்னர் நவ்தீப் செய்னி களமிறங்கினார். ஆட்டத்தின் 11வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். அப்போது அவர் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட நவ்தீப் செய்னி லேசாக பேட்டால் தொட அது அவரின் காலில் உரசி ஸ்லிப் திசையில் இருந்த வாட்சன் கையில் கேட்சாக அமைந்தது. இதற்கு நடுவர் அவுட் தரவில்லை இதனையடுத்து சிஎஸ்கே அணி வீரர்கள் ஆலோசனை செய்தனர். 

 

அப்போது ரிவ்யூ எடுக்க நேரம் முடியும் தருவாயில் தோனி ரிவ்யூ எடுத்தார். ரிப்ளேவில் பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது. இதனால் நடுவர் தீர்ப்பு மாற்றப்பட்டு அவுட் கொடுத்தார். இதன்மூலம் ரிவ்யூ எடுப்பதில் சமார்த்தியமானவர் என்று தோனி மறுபடியும் நிருபித்துள்ளார். இருப்பினும், ஜடேஜா பந்துவீச்சில் கேட்கப்பட்ட ரிவ்யூவ் வீணானது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close