[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

சென்னை - பெங்களூரூ போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் யார்?

csk-vs-rcb-ipl-2019-five-players-who-are-expected-set-the-stage-on-fire-in-opening-fixture

12-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் இந்தப் போட்டியில் மிகவும் கவனிக்கவேண்டிய ஐந்து வீரர்கள் யார் யார்? என்பதை பார்க்கலாம்.

  

தோனி:

சென்னை அணியின் கேப்டன் தோனி எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர். அதிலும் சென்னை அணிக்குகாக சேப்பாக்கத்தில் விளையாடும் போது அவர் மீது ரசிகர் அளவு கடந்த எதிர்பார்ப்பு மற்றும் கவனம் வைத்திருப்பார்கள். ஏற்கனவே கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தனது ரீயேண்டிரி கொடுத்த போது தோனி 16 போட்டிகளில் 455 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் தோனி தன்னுடைய துல்லியமான கீப்பிங்கினால் சில அசத்தலான கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் செய்தார். அதனால் இந்த ஐபிஎல் தொடரிலும் இது தொடரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

 

விராட் கோலி:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களின் பேராதரவு பெற்றவர். இவர் இந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கோப்பையை பெற்று தரவேண்டும் என்ற முன்னைப்புடன் களமிறங்கவுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கோலி சிஎஸ்கே அணிக்கு எதிராக இதுவரை 21 போட்டிகளில் 732 ரன்கள் விளாசியுள்ளார். அத்துடன் சென்னை அணிக்கு எதிராக அவர் 6 முறை அரைசதம் கடந்து மிரட்டியுள்ளார். இதனால் இன்றைய போட்டியிலும் அவர் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணியிலும் அவருடைய பார்ம் மிரட்டும் வகையில் உள்ளது. 

  

ஏ.பி.டிவில்லியர்ஸ்:

கிரிக்கெட் உலகில் ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படுபவர் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ். இவர் அடிக்க ஆரம்பித்து விட்டால், அது எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக நாளாக அமைந்துவிடும். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விரட்டியடிப்பதில் இவர் திறமை வாய்ந்தவர். அதனால், இவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம். கடந்த ஐபிஎல் தொடரில் இவர் 12 போட்டிகளில் 480 ரன்கள் குவித்தார். இந்த ரன்களை 53.33 சராசரியுடனும் 174.54 ஸ்டிரைக் ரேட்டுடனும் அடித்திருந்தார். இதனால் இம்முறையும் இவரது அதிரடி தொடரும் என்று ரசிகர் தீவிர ஆர்வத்துடன் உள்ளனர்.

அம்பத்தி ராயுடு:

2019 கிரிக்கெட் உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளதால் அம்பத்தி ராயுடுவிற்கு இந்த ஐபிஎல் முக்கியமானதாக இருக்கும். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ராயுடு சிறப்பாக விளையாடவில்லை. அத்துடன் அவரின் ஃபார்மும் சற்று குறைந்துள்ளது. அதனால் இந்த தொடரில் அவர் தன்னை நிருப்பிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அவரின் ஆட்டம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

ரவீந்திர ஜடேஜா:

அஸ்வின் சென்னை அணியிலிருந்து சென்ற பிறகு, அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக ஜடேஜா இருந்துவருகிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் விராட் கோலியை ஜடேஜா மூன்று முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். அத்துடன் கடந்த ஐபிஎல் தொடரில் ஜடேஜா இரண்டு முறை கோலி அவுட் ஆவாதற்கு காரணமாக இருந்திருக்கிறார். அதனால் அவர் இம்முறையும் கோலியின் விக்கெட்டை எடுப்பார் என எதிர்பார்க்கலாம். மேலும் ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறும் வாய்ப்பும் அதிகமாகும் என்பதால் அவர் இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close