[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

“கோலி தன் ஆட்டத்தை சிறப்பாக அமைத்தால் உலகக்கோப்பை நிச்சயம்” - ரிக்கி பாண்டிங் 

if-virat-kohli-has-a-good-world-cup-then-india-will-win-says-ricky-ponting

விராட் கோலி தனது ஆட்டத்தை சிறப்பாக அமைத்துவிட்டால் இந்தியா உலக்கோப்பையை வென்றுவிடும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

2003 மற்றும் 2007ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியே கைப்பற்றியது. அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தற்போது ஓய்வு பெற்ற ரிக்கி பாண்டிங், வர இருக்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார். 

இந்நிலையில் ஐபிஎல் குறித்தும், எதிர்வர இருக்கும் உலகக் கோப்பை குறித்தும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் விராட் கோலி இக்கட்டான நிலைமைகளில் பொறுப்பாக விளையாடுவதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு ''சச்சின் டெண்டுல்கரும் இக்கட்டான நிலைமையில் பதட்டம் இல்லாமல் பொறுப்பாக விளையாடுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல சமயங்களில் அவர் அப்படித்தான் விளையாடி இருக்கிறார்'' என்று தெரிவித்தார். 

மேலும் ''விராட் கோலி விளையாடுவதை பார்த்தால் அது என்னையே நினைவுப்படுத்தும். அவரின் பல ஸ்டைல்கள் என்னைப்போலவே இருக்கிறது. மைதானத்தில் அவருடைய துடுக்கும், அவரது உடல் மொழியும் அப்படியே என்னைப் போலவே இருக்கிறது. பேட்டிங் ஸ்டைலிலும் அவர் என்னையே நினைவுப்படுத்துகிறார். அவருடைய ஒருநாள் போட்டியின் சாதனைகள் ஆச்சரியத்தை அளிக்கிறது. அதனால் தான் இந்திய அணியை நான் அபாயமாக கருதுகிறேன். விராட் கோலி தனது ஆட்டத்தை சிறப்பாக அமைத்துவிட்டால் இந்தியா உலக்கோப்பையை வென்றுவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து பேசிய அவர், ''வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 2015க்கு பிறகு தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்றுதான் நினைத்தேன். 2019 உலகக் கோப்பையில் அவர் விளையாட மாட்டார் என்று கூட யோசித்தேன். ஆனால் அவர் இன்னமும் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் கூட சிறப்பாக விளையாடினார். உலக்கோப்பை போட்டிக்கு இந்திய அணிக்கு தோனி பலமாக இருப்பார்'' என்றும் கூறியிருக்கிறார்.

உலகக்கோப்பை அரையிறுதியை பொறுத்தவரையில் அது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் அரையிறுதிக்குள் வந்தால் ஆச்சரியப்பட்ட ஒன்றுமில்லை என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close