[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

“ராணுவ தொப்பியை அணிய அனுமதி பெற்றது பிசிசிஐ” - ஐசிசி ஒப்புதல் 

icc-says-india-sought-permission-to-wear-camouflage-caps

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி பெற்றனர் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பீல்டிங் மற்றும் பேட்டிங்கின் போது ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லட்ட துணை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்தனர்.

                

இந்தப்போட்டியில் ராணுவ கேப் அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தினார். அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்சன் மணி “இந்த விவகாரத்தை கடுமையாக சர்வேதச கிரிக்கெட் கவுன்சிலிடம் எடுத்து செல்வோம். கிரிக்கெட்டும் அரசியலும் ஒன்றாக சேர்க்கூடாது. இந்தச் செயலின் மூலம் இந்தியாவின் மதிப்பு சர்வேதச கிரிக்கெட் அரங்கில் குறைந்து போனது”என்று தெரிவித்திருந்தார்.

               

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் தெளிவுப்படுத்தியுள்ளது. அதில் “பிசிசிஐ எங்களிடம் ராணுவ தொப்பிக்களை அணிந்து விளையாட அனுமதி பெற்றது. அதில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக அணியவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது” எனக் கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close