[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

சதம் விளாசிய ஷிகர் தவான் - இந்திய அணி 358 ரன் குவிப்பு

143-from-dhawan-and-a-gritty-95-from-rohit-sharma-guides-team-india-to-a-total-of-358-9-in-50-overs

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்துள்ளது. 

மொகாலி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடர்ந்து சொதப்பி வந்த ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி இந்தப் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். ஷிகர் தவான் 44 பந்துகளிலும், ரோகித் 61 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 17.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது.

             

இந்திய அணி 30 ஓவரில் 182 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 92 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தவான் 97 பந்துகளில் சதம் அடித்தார். சதம் அடித்த பின்னர், அவர் அதிரடி காட்டினார். ஷிகர் தவான் 115 பந்துகளில் 3 சிக்ஸர் 18 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். விராட் கோலியும் 7 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணியின் சரிவு தொடங்கியது. கே.எல்.ராகுல் 26, பண்ட் 36, கேதர் ஜாதவ் 10 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

         

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. இறுதியில் அதிரடியாக விளையாடிய விஜய் சங்கர் 15 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட் சாய்த்தார். ரிச்சர்ட்சன் 3 விக்கெட் எடுத்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close