[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

ராணுவ ‘கேப்’ அணிந்த இந்திய வீரர்கள் - நடவடிக்கை எடுக்க பாக். கோரிக்கை

pakistan-demands-icc-action-against-india-for-wearing-military-cap

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. 

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பீல்டிங் மற்றும் பேட்டிங்கின் போது ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லட்ட துணை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் ராணுவ கேப் அணிந்தனர். 

            

இந்நிலையில், ராணுவ கேப் அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, “தன்னுடைய சொந்த தொப்பிக்கு பதிலாக ராணுவ தொப்பியை அணிந்து இந்திய அணி விளையாடியதை உலகமே பார்த்தது. ஐசிசி பார்க்கவில்லையா?. ஐசிசி தானாக முன் வந்து இந்திய அணி மீது நடவடிக்க எடுக்க வேண்டும்” என்று கூறினார். 

          

மேலும், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபவட் சவுத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இது வெறும் கிரிக்கெட் இல்லை. இந்திய அணி இதனை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், காஷ்மீரில் நடக்கும் இந்திய அரசின் கொடுமைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close