[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“நான் அதிருப்தி அடைந்தேன்; அணியில் மாற்றமிருக்கும்” - விராட் கோலி

i-really-dissappointed-few-changes-will-come-on-next-match-virat-kohli

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தனது விக்கெட்டை பறிகொடுத்த விதத்தால் தான் அதிருப்தி அடைந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்ஜியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது. அந்த அணியில் உஸ்மான் காவஜா 104 (113), கேப்டன் ஆரோன் ஃபின்ச் 93 (99) மற்றும் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் 47 (31) ரன்களை குவித்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து விளையாடிய இந்திய 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி 123 (95) ரன்கள் விளாசினார். ஆட்டத்தின் நாயகனாக உஸ்மான் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் போட்டி தொடர்பாக பேசிய விராட் கோலி, “நம் அணியினர் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களுக்கு இன்னும் சில வாய்ப்புகள் வேண்டும். நாங்கள் சரிவடைய விரும்பவில்லை. நாங்கள் (விராட் கோலி, விஜய் சங்கர், தோனி) முடிந்த வரை ஜோடி சேர்ந்து விளையாடினோம். ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்கள் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். உஸ்மான் ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்றபோது, மேக்ஸ்வேல் அதிரடியை வெளிப்படுத்தினார்.

நாங்கள் 350க்கும் மேலான இலக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எண்ணினோம். ஆனால் நமது பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிலியாவை பின்னர் கட்டுப்படுத்தினர். என்னால் முடிந்த வரை கடினமாக விளையாடி போராடினேன். எனக்கு எப்போது ஒரு நம்பிக்கை இருக்கும். நான் கூடுதலாக ரன் எடுக்கவே நினைப்பேன். ஷம்பா சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நான் அவுட் ஆகியா விதத்தால் அதிருப்தி அடைந்தேன். அடுத்த போட்டியில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close