[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

அசத்தலாக விளையாடிய விஜய் சங்கர் - முதல் பந்தில் அவுட் ஆன தோனி

india-vs-australia-vijay-shankar-s-brilliant-innings-cut-short-by-unlucky-dismissal-watch

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தார். அவரை தொடர்ந்து தவான் 21(29), அம்பத்தி ராயுடு 18(32) ரன்னில் ஆட்டமிழந்தனர். 

இந்திய அணி 75 ரன்னிற்குள் மூன்று விக்கெட்களை இழந்தது. பின்னர், 5வது விக்கெட்டுக்கு தோனிக்கு பதிலாக விஜய் சங்கர் களமிறங்கினார். இது எதிர்பாராத ஒன்று. விஜய் சங்கர் ஒரு நேர்த்தியான பேட்ஸ்மேனை போல், அற்புதமாக விளையாடினார். விராட் கோலியும் போட்டி போட்டு ரன்களை எடுத்தார். இருவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. 

         

விஜய் சங்கர் பந்துகளை துளியும் வீணடிக்காமல், அவ்வபோது பவுண்டரிகளையும் விளாசினார். இடையில் ஒரு சிக்ஸரும் அடித்தார். சிறப்பாக விளையாடி வந்த அவர், ஜம்பா வீசிய 29வது ஓவரில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகினார். இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. விஜய் சங்கர் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இருந்தார். 

              

வழக்கமாக விக்கெட் அடுத்தடுத்து விழும் போது, தோனி களமிறங்கி நிலைத்து விளையாட நிறைய பந்துகளை எடுத்துக் கொள்வார். அதனால், ரன்ரேட் வேகம் குறையும். ஆனால், விஜய்சங்கர் இறங்கியது முதலே சீரான வேகத்தில் ஒரு கிளாசிக் பேட்ஸ்மேனை போலவே விளையாடினார். ஹர்திக் பாண்ட்யா ஓய்வில் இருப்பதால்தான் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது இன்றையை ஆட்டம், இந்திய அணியில் அவருக்கான இடத்தினை மேலும் உறுதி செய்துள்ளார். 

       

விஜய் சங்கர் ஆட்டமிழந்த போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், பின்னர் வந்த கேதர் ஜாதவும் 11 ரன்னிலும், தோனி ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 171 ரன்னிற்குள் 6 விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்துள்ளது. விராட் கோலி 96 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

        

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 4 அரைசதம் அடித்த தோனி இன்றைய போட்டியில் டக் ஆகியுள்ளார். அதேபோல், தொடர்ச்சியாக நாட் ஆகியும் அவர் வந்தார். தோனியை எப்படி ஆட்டமிழக்க செய்வது என்று தெரியாமல் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். ஆனால், இன்றையப் போட்டியில் தோனி, தனது ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close