[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மீண்டும் களத்துக்கு வந்தார் ரோமன் ரெய்ன்ஸ் !

roman-reigns-back-in-action-after-a-big-gap-for-medical-treatment

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு wwe மல்யுத்தப் போட்டியில் இருந்து பல மாதங்களாக சிகிச்சையில் இருந்த wwe சாம்பியன் ரோமன் ரெய்ன்ஸ் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் ஆரவாரமாக சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

wwe என்று உலகளவில் கொண்டாடப்படும் மல்யுத்தப் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் மிகவும் பிரபலம், இந்தப் போட்டிகள் வாரந்தோறும் இரண்டு பெயர்களில் நடத்தப்படுகிறது. இது wwe ரா என்றும் ஸ்மேக் டவுன் என்றும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும். இது இந்தியாவில் நேரலையாக செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒளிபரப்பப்படும். இவ்வகையான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. முக்கியமாக wwe போட்டிகளுக்கு சிறுவர்கள் பலரும், பெரியவர்கள் சிலரும் இன்னும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவில் 1990-களுக்கு பின்பு கேபிள் டிவிகளும், சேட்டிலைட் சேனல்களும் வந்த பின்புதான் wwe பிரபலமாக தொடங்கியது. wwe போட்டிகளில் ஹல்க் ஹோகன், ரிக் ஃப்ளேர், ஹிட் மேன், மாச்சோ மேன், அண்டர்டேக்கர், ஸ்டோன் கோல்டு, ராக், படீஸ்டா, ட்ரிப்பிள் எச் மற்றும் ஜான் சீனா ஆகியோர் wwe போட்டிகளை பார்ப்பவர்களின் ஆதர்ச நாயகன்களாக இருக்கின்றனர். இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு ரோமன் ரெய்ன்ஸ்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி ரோமன் ரெய்ன்ஸ் அவரது ரசிகர்களுக்கு அதிகர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்  அது " "தனக்கு லுகுமேனியா என்ற வகையான புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நோய் எனக்கு இருந்தது. அதிலிருந்து நான் மீண்டு வந்து போட்டிகளில் பங்கேற்றன். இப்போது இந்த புற்றுநோய் மீண்டும் என தாக்கியுள்ளது." என கூறினார்.

இந்தத் தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்களுக்கு மேலும் சில தகவல்களை பகிர்ந்தார் ரோமன் ரெய்ன்ஸ் அதில் "லுகுமேனியாவுக்கு சிகிச்சை பெறவுள்ளதால், தன்னால் இப்போது போட்டிகளில் பங்கேற்க முடியாது. அதனால் wweவில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். இதோ இந்த சாம்பியன் பெல்ட்டை இப்படியே விட்டுவிட்டு செல்கிறேன். இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இறைவனின் துணை இருந்தால் மீண்டும் இந்த ரிங்கில் சந்திக்கிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்துவிட்டு ரிங்கில் இருந்து ரசிகர்களுக்கு கையசைத்தப்படி வெளியேறினார் ரோமன் ரெய்ன்ஸ்.

இந்தக் காட்சியை கண்ட பல ரசிகர்கள் அழுதனர். மேலும், wweவை சேர்ந்த மற்ற வீரர்களும் ரோமன் ரெய்ன்ஸ்க்கு பிரியா விடை கொடுத்தனர். இதனையடுத்து ட்விட்டர் வலைத்தளத்தில் #RomanReigns என்ற ஹாஷ் டாக் டிரண்ட் ஆகி வருகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர் ரோமன் ரெய்ன்ஸ். இவரின் இயற்பெயர் ஜோசப் அனோவா. ஆரம்பத்தில் கால்பந்து வீரராக இருந்த ரோமன், பின்னாளில் மல்யுத்தம் மீதான ஆர்வத்தில் wwe போட்டிகளில் பங்கேற்றார். 2014 இல் கலீனா பெக்கர் என்பவரை திருமணம் செய்த ரோமனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது.

மல்யுத்த ரிங்கில் ரோமன் ரெயன்ஸின் துடிப்பான நகர்வும், அவரின் பிரத்யேக தாக்குதல் முறையான "ரோமன் ஸ்பியர்" பெரும்பாலான இளைஞர்களை கவர்ந்தது. wwe போட்டிகள் ஒரு நாடகம் போலதான் என்றாலும் இப்போதுள்ள தலைமுறையினருக்கு அதனை சுவார்ஸ்யமாக கொண்டு சென்றதில் ரோமன் ரெயன்ஸின் பங்கு அதிகம். இனி அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் ரோமன் ரெயன்ஸ் இல்லாதது wwe ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரோமன் ரெய்ன்ஸ் மீண்டும் வந்தார். முக்கியமாக இன்று ரோமன் ரெய்ன்ஸ் அணிந்திருந்த டி ஷர்ட்டில் இருந்த வாசகம் பலரையும் இன்ஸ்பையர் செய்தது அதில் " நாம் சண்டையிடுவோம்,  நாம் மீளுவோம், நம்பிக்கையோடு இருப்போம்".

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close