[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நாக்பூரில் இன்று 2-வது ஒரு நாள் போட்டி: வெற்றி முனைப்பில் இந்திய அணி!

2nd-odi-australia-sweat-on-finch-s-form-india-target-little-gains

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வரு கிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒரு நாள் போட்டி நாக் பூரில் இன்று நடக்கிறது. 

முதலாவது போட்டியில், ரன் கணக்கை தொடங்காமலேயே தவான் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 37 ரன்னிலும் கேப்டன் கோலி 44 ரன்னிலும் ராயுடு 13 ரன்னிலும் ஆட்டமிழந்து 99 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிந்தது, இந்திய அணி. அப்போது இறங்கிய அனுபவ வீரர் தோனியும், கேதர் ஜாதவும் நிதானமாக ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். தோனி 59 ரன்னும் ஜாதவ் 81 ரன்னும் எடுத்த னர். இந்த ஜோடி, 5-வது விக்கெட்டுக்கு 141 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

இன்று நடக்கும் போட்டியில் தவானும் ரோகித்தும் வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுக்க வேண்டியது முக்கியம். குல்தீப் யாதவ், ஜடே ஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் கடந்த போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினர். வழக்கமாக மிரட்டும் பும்ரா, கடந்த போட்டியில் 60 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்தப் போட்டியில் அவர் கலக்குவார் என்று நம்பலாம்.

ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கும். இதற்காக அந்த அணியில் மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. கேப்டன் ஆரோன் பின்ச் ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அவர் அடிக்கவில்லை. அவர் சிறப் பாக ஆடும்பட்சத்தில், இந்திய அணிக்கு சவால் கொடுக்க முடியும். மூத்த வீரர் ஷான் மார்ஷ் இன்றைய போட்டியில் களமிறங்குவார் எனத் தெரிகிறது. 

போட்டி நடக்கும் நாக்பூர் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. அதனால் இன்று ரன்மழை பொழிய வாய்ப்பிருக்கிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டித் தொடங்குகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close