[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

கண்ணை மூடிக் கொண்டு தோனியை பின்பற்றுவேன் - கேதர் ஜாதவ்

india-vs-australia-i-follow-ms-dhoni-blindly-says-kedar-jadhav-on-chahal-tv

களத்தில் இருக்கும் போது கண்ணை மூடிக் கொண்டு தோனியை பின்பற்றுவேன் என்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 81 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேதர் ஜாதவ் ஆட்டநாயகனான தேர்வு செய்யப்பட்டார்.

237 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 99 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர், தோனி - கேதர் ஜாதவ் ஜோடி நிலைத்து ஆடி விக்கெட் இழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர். தோனி 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 141 ரன்கள் குவித்தது. 

         

இந்நிலையில், “களத்தில் இருக்கும் போது கண்ணை மூடிக் கொண்டு தோனியை பின்பற்றுவேன். வெற்றியும் பெறுவேன்” என்று கேதர் ஜாதவ் கூறியுள்ளார். மைதானத்தில் சாஹலுக்கு அளித்த பேட்டியில், ‘நீங்கள் மறுமுனையில் இருக்கும்வரை எனக்கு எந்த பயமும் இல்லை’ அவரிடமே கூறியிருக்கிறேன். இலக்கை பற்றிய கவலையில்லை. தோனியுடன் விளையாடுவது எப்பொழுதும் சிறப்பானது.

என்னுடைய தொடக்க காலம் முதலே அவருடைய விளையாட்டினை டிவியில் பார்த்து வந்திருக்கிறேன். தற்போது அவருடன் சேர்ந்து விளையாடி போட்டியை வெற்றிப் பெற வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இதனைவிட பெரிய கனவும் எதுவும் இருக்காது” என்றார் கேதர் ஜாதவ். 

         

தோனி - கேதர் ஜாதவுடன் இணைந்து 5 விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து இருந்தார். இதோடு சேர்த்து 28வது முறையா தோனி 5வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் மூலம் அடித்துள்ளார். தோனிக்கு அடுத்து யுவராஜ் சிங் 13 முறை இதுபோல் அடித்துள்ளார்.

முன்னதாக, நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி தொடர்ச்சியாக 4 அரைசதம் அடித்துள்ளார். அதேபோல், நேற்றைய போட்டி தோனி பங்கேற்ற 597வது போட்டியாகும். இதில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் பங்கேற்ற விக்கெட் கீப்பர் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். மார்க் பவுச்சர் 596 போட்டிகளில் பங்கேற்றதே இதுவரை முதலாவதாக இருந்தது.

         

அதேபோல், நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்து, மீண்டும் இந்தியாவுக்கு அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற இடத்தை தோனி பிடித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close