[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

சவும்யா, மகமத்துல்லா சதம் வீண்: வென்றது நியூசிலாந்து

new-zealand-wrap-up-victory-after-defiant-tons-from-soumya-sarkar-and-mahmudullah

பங்களாதேஷூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நடந்தது. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் தமிம் இக்பாலின் சிறப்பான சதத்தால், 234 ரன் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டை அள்ளினார். சவுதி 3 விக்கெட்டையும் போல்ட், கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணி, ஒரு இன்னிங்ஸில் எடுத்துள்ள அதிகப்பட்ச ஸ்கோர் இது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார்.

இதையடுத்து பங்களாதேஷ் அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப் புக்கு 174 ரன் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. சவும்யா சர்கார் 149 ரன்னும் கேப்டன் மஹமத்துல்லா 146 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்ததும் அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைக்கவில்லை. இதனால் அந்த அணி, 429 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.


நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டையும் டிம் சவுதி 3 விக்கெட்டையும் நீல் வாக்னர் 2 விக்கெட் டையும் வீழ்த்தினர்.  இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னலை பெற் றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close