[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமனம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான பரப்புரையை நாளை திருவாரூரில் தொடங்கும் நிலையில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களவை தேர்தலில் 1 தொகுதி, இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டி - சே.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)

விஜய் சங்கரின் அசத்தலான கேட்ச் - வீடியோ

vijay-shankar-takes-a-blinder-to-get-rid-off-usman-khawaja

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமிழ்நாடு வீரர் விஜய் சங்கர் அசத்தலாக கேட்ச் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. இப்போது ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் கவாஜா களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பும்ரா ஆரோன் பின்ச் விக்கெட்டை சாய்த்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த கவாஜாவும் ஸ்டோயினிஸ் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கவாஜா 50 ரன்கள் எடுத்திருந்தார்.

அப்போது ஆட்டத்தின் 24வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தை கவாஜா இறங்கிவந்து தூக்கி அடித்தார். பந்து மிட்விக்கெட் திசையை நோக்கி வானில் சுழன்று சென்றது. மிட்விக்கெட் பகுதியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர் தனது வலது புறம் நோக்கி ஓடினார். ஆனால் பந்து சுழன்று கொண்டு வந்ததால் பந்தை பிடிக்க அவர் தரையில் சரிந்து சென்று லாவகமாக பந்தை கேட்ச் பிடித்தார்.

இந்த நிகழ்வின்போது வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “இது குல்தீப்பின் விக்கெட் இல்லை விஜய் சங்கரின் விக்கெட்” என தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close