[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கேதர் ஜாதவ், தோனி அரைசதம் - இந்திய அணி வெற்றி

india-lose-4-wickets-early-but-a-steady-patnership-from-kedar-and-dhoni-helped-us-win-the-match-with-ease

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கவாஜா அதிகபட்சமாக 50(76) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 40, ஸ்டோய்னிஸ் 37, கர்ரே 36 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். 

              

இதனையடுத்து, 237 ரன்கள் என்ற குறைவான இலக்கை விராட்டி விளையாடிய இந்திய அணிக்கு, தொடக்கத்திலே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் ஷிகர் தவான். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அவ்வவ்போது சில பவுண்டரிகளை மட்டும் இருவரும் அடித்தனர். ஒரு கட்டத்தில் விராட் பவுண்டரிகளாக விளாசினார். ஆனால், ஜம்பா பந்துவீச்சில் எல்.பி.டபிள்வூ ஆகி ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்திருந்தார். 

     

விராட் கோலி ஆட்டமிழந்த சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார். மிகவும் நிதானமாக விளையாடி வந்த ரோகித், 66 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடுவும் 13(19) ரன்னில் நடையை கட்ட இந்திய அணி 100 ரன்களை எட்டுவதற்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. 

              

இதனையடுத்து, தோனியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஒன்று, இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தனர். பெரும்பாலும் விக்கெட் விளாமல் இருக்க டாட் பந்துகள் ஆக்கினர். கேதர் ஜாதவ் 70 பந்துகளிலும், தோனி 68 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு இது நல்ல தொடக்கமாக அமைந்துவிட்டது. 

               

இந்திய அணி 99 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், தோனி - கேதர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றது. கேதர் ஜாதவ் 81(87), தோனி 59(72) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 81 ரன்கள் எடுத்த கேதர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close