[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

உலகக்கோப்பையை வெல்ல தோனி உதவுவார் - சுனில் கவாஸ்கர்

how-ms-dhoni-can-help-virat-kohli-lift-the-world-cup-says-sunil-gavaskar

தோனிக்கும், கோலிக்கும் இடையேயுள்ள புரிதல் உலகக்கோப்பை வெல்ல உதவியாக இருக்குமென சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய கிரிக்கெட் திருவிழாவான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.  இந்தத் தொடர் இங்கிலாந்து நாட்டில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு கிரிக்கெட் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியும் அதற்கு ஆயத்தமாகும் வகையில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. உலகக் கோப்பையை மனதில் கொண்டே இந்தத் தொடருக்கான அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்குமென சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

அதில் தோனியை அணியின் கீப்பராக பெற்றிருப்பது விராட் கோலிக்கு ஆரோக்யமான ஒன்று என்று நினைக்கிறேன். விராட் கோலி தடுமாறும் போதெல்லாம் தோனி அவருக்கு உதவிகிறார். பீல்டிங்கில் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் தோனி ஆலோசனை வழங்குகிறார். இக்கட்டான நிலைகளில் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கி உத்வேகம் கொடுக்கிறார். 

இக்கட்டான வாழ்வா சாவா என்ற நேரங்களில் தோனியின் ஆலோசனை மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தோனிக்கும், கோலிக்கும் இடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது. அவர்கள் பரஸ்பரமாக மதித்துக்கொள்கிறார்கள். இந்த புரிதலுடன் இவர்கள் இருப்பது உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close