[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

முதல், ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்!

australia-won-the-toss-and-elected-to-bat

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணி களுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. இப்போது ஒரு நாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டி20 தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணி, ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் வேகத்துடன் களம் இறங்கியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும் சில நேரங்களில் சொதப்பல் திலகமாகவும் மாறிவிடுகிறார்கள். தொடக்க ஆட்டக் காரர்களான ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் வலுவான தொடக்கம் அமைத்து கொடுப்பது அவசியம்.

பயிற்சியில் நேற்று ஈடுபட்டுக்கொண்டிருந்த தோனி, காயம் அடைந்ததால், அவர் இன்று ஆடுவது சந்தேகம் என்று கூறப்பட்டது. ஆனால், அது பெரிய காயம் இல்லை என்பதால் அவர் அணியில் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். 

டி20 தொடரை கைப்பற்றியுள்ளதால் ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. மேக்ஸ்வெல்லின் சிறப்பான ஃபார்ம் அவர்களுக்கு இன் னும் அதிக நம்பிக்கையை கொடுக்கும். கேப்டன் ஆரோன் பின்ச் தடுமாறி வருவது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. கடைசி 7 ஒரு நாள் போட்டிகளில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று இரு அணிகளும் நினைப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கலாம்.

அணி விவரம்:
இந்திய அணி:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, விஜய் சங்கர், ஜடேஜா, கேதர் ஜாதவ், முகமது ஷமி, பும்ரா

ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் பின்ச் (கேப்டன்), கவாஜா, ஸ்டோயினிஸ், ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், டர்னர், கேரி, கோல்டர் நைல், கம்மின்ஸ், பேரண்ட்ஃரோப், ஜம்பா.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close