[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பங்களாதேஷூக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி ரன் குவிப்பு!

williamson-s-200-puts-nz-in-complete-control-of-bangladesh-test

பங்களாதேஷூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 715 ரன் குவித்து டிக்ளேர் செய்தது

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட், ஹாமில்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பாலின் சிறப்பான சதத்தால், அந்த அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. அவரைத் தவிர வேறு யாரும் நிலைத்து நிற்காததால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 234 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தமிம் இக்பால் 126 ரன் எடுத் தார். 

நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டை அள்ளினார். சவுதி 3 விக்கெட்டையும் போல்ட், கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி தொடங்கியது. அந்த அணியின் ஜீத் ராவலும் டாம் லாதமும் தொடக்க வீரர்களாக களமிறங் கினர். சிறப்பாக ஆடிய ராவல் அபார சதம் அடித்தார். இது அவருக்கு முதல் சதம். அவர் 132 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டாம் லாதமும் சதம் அடித்தார். 161 ரன் எடுத்த அவர், சவும்யா சர்கார் பந்துவீச்சில் மிதுனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு பக்கம் நிலைத்து நிற்க, மறுமுனையில் டெய்லர் (4 ரன்) நிக்கோலஸ் (53 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். 

நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 451 ரன் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 93 ரன்னுடனும் நீல் வாக்னர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய வாக்னர் 47 ரன்னிலும் அடுத்து வந்த வாட்லிங் 31 ரன்னிலும் ஆட்டாமிழந்து வெளியேற, ஒரு பக்கம் நங்கூரமாக நின்ற கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார். 143 பந்தில் சதம் கண்ட வில்லியம் சன், 257 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு இரண்டாவது இரட்டை சதம்.

அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன்னாக இருந்தது. அந்த அணி, ஒரு இன்னிங்ஸில் எடுத்துள்ள அதிகப்பட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 690 ரன் குவித்ததே அந்த அணியின் அதிகப் பட்சமாக இருந்தது. இப்போது அதை முந்தியுள்ளது.  இதையடுத்து டிக்ளேர் செய்யப்பட்டது. வில்லியம்சன் 200 ரன்னுடனும் கிராண்ட் ஹோம் 76 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த தமிம் இக்பால் 74 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நான்காவது நாள் ஆட்டம் நாளை நடக்கிறது. இந்தப் போட்டியை வெல்ல நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close