[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு

தோனிக்கே ஸ்டம்பிங்கா ? - பாராட்டிய பிசிசிஐ.. நெகிழ்ந்த ரசிகர்கள்

india-vs-australia-ms-dhoni-shows-why-age-is-just-a-number-for-him-watch

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், தோனி ஸ்டம்பிங்கிலிருந்து தப்பிக்க தனது கால்களை அகட்டி வைத்த படம் ட்விட்டரில் வைரலாக பகிரங்கப்பட்டு வருகிறது. 

தோனி 37 வயதினை கடந்துவிட்டாலும், பிட்னஸில் தன்னுடைய வலிமையை தொடர்ந்து அவர் வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணியில் மிகவும் பிட்னஸான வீரராக கேப்டன் விராட் கோலி கருதப்படுகிறது. ஆனால், ஒரு சில நேரங்களில் தோனியுடன் விளையாடும் தருணத்தில் ரன் எடுக்க ஓடும் போது அவருக்கு இணையாக ஓட கோலியே சற்று சிரமப்படுவார். தோனியின் அந்த வேகம் இன்னும் குறையவில்லை. 

        

அதேபோல், தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் இன்றளவும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்து வருகிறது. கோட்டை தாண்டி செல்ல வேண்டும் என நினைத்தாலே அவ்வளவுதான். கண் இமைக்கும் நொடிகளில் அவர் ஸ்டம்பிங் செய்துவிடுவார்.

அப்படி இருக்கையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோனியை, ஆடம் ஜம்பா ஓவரில் ஸ்டம்பிங் செய்ய முயற்சி செய்தார் விக்கெட் கீப்பர். ஆனால், சுகாதரித்துக் கொண்ட தோனி, தன்னுடைய காலினை ரப்பர் போல் அகட்டி கிரீஸில் வைத்தார். பின்னர், ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்துவாங்கிய தோனி 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். 

        

இந்தப் போட்டிக்கு பின்னர், தோனி ஸ்டம்பிங்கிலிருந்து தம்பிக்க தனது கால்களை அகட்டி வைத்த அந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்களாக அந்தப் படம் வைரலானது. இதனையடுத்து, தோனியின் இந்தச் செயலினை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பதிவு செய்துள்ளது.

       

இதற்கு முன்பும் பல முறை தோனி இதுபோல் ஸ்டம்பிங்கிலிருந்து தப்பித்துத்துள்ளார். ஒரு முறை இதுபோன்ற ஒரு படத்தை பதிவிட்டு அணியில் இப்படிதான் தோனி நீடித்திருக்கிறார் என்று விமர்சனம் கூட செய்திருக்கிறார்கள். 

 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close