[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

சதம் விளாசினார் மேக்ஸ்வெல் - தொடரை வென்றது ஆஸ்திரேலியா

an-outstanding-knock-of-113-from-maxwell-guides-the-visitors-to-a-7-wkt-victory-in-the-second-t20i

மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல்.ராகுல் 47, தோனி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் விராட் கோலியும், தோனியும் ஜோடி சேர்ந்து 49 பந்துகளில் 100 ரன்கள் குவித்தனர். இருவரும் போட்டி போட்டு சிக்ஸர் மழை பொழிந்தனர். விராட் கோலி 6, தோனி 3 சிக்ஸர்கள் விளாசினர். 

பின்னர், 191 ரன் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 22 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்தது. இருப்பினும், ஷார்ட், மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஷார்ட் 40(28) ரன்னில் ஆட்டமிழக்க மேக்ஸ்வெல் சிக்ஸர் மழை பொழிந்தார். அதனால், ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. இந்திய பந்துவீச்சாளர் அனைவரது பந்துகளை அவர் அடித்து நொறுக்கினார். அதிரடியாக விளையாடி மேக்ஸ்வெல் சதம் விளாசினார். 

             

இறுதி ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 194 ரன் குவித்து வெற்றியை பதிவு செய்தது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close