[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

“தோல்வி தொடராது, இனி வரும் போட்டிகளில் வெல்வோம்” - குருனல் பாண்ட்யா

we-haven-t-been-losing-consecutive-matches-krunal-pandya

முதல் டி20 போட்டியில் அடைந்த தோல்வி தொடராது இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் எனவும் இந்திய கிரிக்கெட் வீரர் குருனல் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 126 ரன்கள் மட்டுமே குவித்ததும், கடைசி ஒரு ஓவரில் 14 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு வாரிக்கொடுத்ததும் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததும் ஒரு காரணம் ஆகும். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோற்றால், ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றும். எனவே நாளைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

பயிற்சிக்கிடையே பேட்டியளித்த இந்திய வீரர் குருனல் பாண்ட்யா, “வெளிநாடுகளில் சென்று அனைத்து போட்டிகளையும் வென்றோம். ஆனால் நம் மண்ணில் தோல்வியடைந்துள்ளோம். கணிக்கமுடியாது விளையாட்டு என்பதை கிரிக்கெட் உணர்த்திவிட்டது. இனி நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நான் நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளில் இந்த தோல்வி தொடராது. இந்த தோல்வி இந்திய அணிக்கு கூடுதல் வேகத்தை கொடுத்துள்ளது. எனவே நாளைய போட்டியிலும், அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியிலும் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close