[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

‘கடைசி ஓவரில் கூட 5 டாட் பந்துகளா....!’ பொறுமையிழந்த தோனி ரசிகர்கள்

ms-dhoni-s-strike-rate-of-78-37-is-the-second-lowest-by-an-india-batsman-in-a-t20i-innings-of-35-balls

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில், தோனியின் மிக மாந்தமான ஆட்டம் ரசிகர்களை பொறுமையிழக்க செய்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் கே.எல்.ராகுல், விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடியதை பார்த்தபொழுத்து இந்திய அணி நிச்சயம் 180 ரன்களை எடுக்கும் என்று எதிர்ப்பு இருந்தது. 

          

இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவர்களில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ரோகித் 5(8), ரிஷப் பண்ட் 3(5), தினேஷ் கார்த்திக் 1(3), குர்ணால் பாண்யா 1(6), உமேஷ் யாதவ் 2(4) என அடுத்தடுத்து சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 15 ஓவர்களுக்குள் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கடைசி 5 ஓவரில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

       

இருப்பினும், இந்தப் போட்டியில் தோனியின் நிதானமான ஆட்டம், அவரது ரசிகர்களை கூட பொறுமையிழக்க செய்துவிட்டது. 37 பந்துகளை சந்தித்த தோனி 27 ரன்கள் மட்டுமே அடித்தார். பவுண்டரிகள் எதுவும் அடிக்கவில்லை. ஒரே ஒரு சிக்ஸர் மட்டும், அதுவும் கடைசி ஓவரில் அடித்தார். 

           

தோனியின் இன்றைய ஆட்டம் குறித்து சமூக வலைதளங்கள் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட பாதி பந்துகளை(18) தோனி டாட் பந்துகளாக மாற்றினார். அதுவும் கடைசி ஓவரில் கூட 5 டாட் பந்துகள் என்பது மிகவும் கொடுமையான விஷயம். தோனியிடம் இருந்து வந்த மிகவும் மோசமான பேட்டிங் இது என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். அவரது ரசிகர்களே பலரும் மிகவும் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர். 

         

ஏற்கனவே தோனி ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தப் போட்டி பலரும் அவரது ஓய்வு பற்றி பேச வைத்துவிட்டதாகவே தெரிகிறது. குறைந்தபட்சம் டி20 போட்டிகளில் இருந்து அவர் நாகரீகமான முறையில் ஓய்வை அறிவித்து விட வேண்டும் கிரிக்கெட் ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார். அடுத்தப் போட்டியுடன் தோனி தனது ஓய்வை அறிவித்து விடுவார் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

       

தோனியின் ஆலோசனை வீரர்களுக்கு வேண்டுமென்றால், அவரை வெறும் அணியின் ஆலோகராக மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று ஒருவர் கூறியிருந்தார்.

        

இன்னொருவர், தோனியின் நிதானமான பேட்டிங்கால் அணி சரிவை சந்திக்கிறதா அல்லது அணியின் சரிவால் தோனி நிதானமாக ஆடுகிறாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். விக்கெட் சரிவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, கடினமான பிட்ச் என காரணங்கள் இருந்தாலும் கடைசி வரை ஷாட் அடிக்காமல் இருந்ததை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று தோனி ரசிகர் ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தார். சிலர் தோனியை இந்திய அணிக்காக விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் தான் ஆக்ரோஷமாக விளையாடுகிறார் என்று விமர்சித்துள்ளனர்.

        

சமூக வலைதளங்கள் முழுவதும் தோனியை வைத்து ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமான சில ரசிகர்கள் மட்டும் தோனிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார்கள்.

   

இந்திய அணி ஆல் அவுட் ஆகாமல் தடுத்துவிட்டாரே ஏன் இதனை எல்லோரும் பார்க்க தவறுகிறார்கள் என்று தோனியின் ரசிகர் ஒருவர் கூறியிருந்தார். 

       

சிலர் தோனியை மட்டும் திட்டுகிறார்களே, டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறாரே அவரை ஏன் எதுவும் சொல்லமாட்டிங்குகிறீர்கள் என்று வேதனையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

       

உலகக் கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், தோனியின் இந்த ஆட்டம் அவருகே சிக்கலாக மாறிவிடும். ‘தோனியை உலகக் கோப்பைக்கான அணியில் யாராலும் எடுக்க முடியாது... அவரைத் தவிர’ என்று ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close