[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

‘பாகிஸ்தானுடன் விளையாடலனா ஒரு பிரச்னையும் வராது’ - கங்குலி கருத்து

he-wants-two-points-i-want-world-cup-sourav-ganguly-reacts-to-sachin-tendulkar-s-comment-on-india-vs-pakistan-world-cup-match

பாகிஸ்தானுடன் விளையாடவில்லை என்றால் பிரச்னை இல்லை என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக வருகின்ற உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடலாமா? வேண்டாமா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிசிசிஐ-யும் இதுதொடர்பாக ஐசிசியிடம் வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளது. 

              

இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்திய அணி விளையாடி நிச்சயம் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். விளையாடாமல் பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகளை தாரை வார்த்துவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். 

             

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் கருத்து சவுரவ் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார். “பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெறவேண்டும் என்று சச்சின் கூறுகிறார். ஆனால், உலகக் கோப்பை வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகக் கோப்பையில் 10 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற எல்லா அணிகளுடன் மோதும். உலகக்கோப்பையின் ஒரே ஒரு போட்டியில் இந்தியா விளையாடவில்லை என்றால், அது ஒரு பிரச்னையாக இருக்காது” என்று காங்குலி கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் விராட் கோலி உள்ளிட்ட பலரும் அரசு எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close