[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

தோனிக்கு ரிஷப் பந்த் விடுத்த சவால் ! பேட்ட பாணியில் பதில் கொடுத்த சிஎஸ்கே 

rishabh-pant-challenges-ms-dhoni-to-ipl-battle-and-csk-s-reply-for-it

தோனிக்கு ரிஷப் பந்த் விடுத்த சவால் ! பேட்ட பாணியில் பதில் கொடுத்த சிஎஸ்கே 


ரிஷப் பந்த்தின் சவாலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக பார்க்கப்படுவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். இந்த ஐபிஎல் போட்டியில் அதிக கவனத்தை ஈர்க்கும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். ஐபிஎல் போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே ‘சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க’என்ற முழக்கம் பட்டி தொட்டி மற்றும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும். அத்துடன் சென்னை முழுவது‘மஞ்சள் ஃபீவர்’ எனப்படும் சிஎஸ்கே அணியின் மஞ்சள் உடை மோகமும் அதிகரித்துவிடும்.

இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி ‘டெல்லி கேபிடல்ஸ்’என்ற புதிய தோற்றத்தில் களமிரங்க உள்ளது. இதற்காக இந்த அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பந்த் ஒரு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். அதில் ரிஷப்பந்த், “தோனி எனக்கு ஒரு குரு. ஏனென்றால் அவர் இல்லையென்றால் நான் விக்கேட் கீப்பராக ஆகியிருக்க மாட்டேன். ஆனால் இந்த முறை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நான் விளையாடும் போது கேப்டன் கூல் தோனி கூலாக இருக்கமுடியாது”எனக் கூறி சவால் விடுகிறார். அத்துடன் இந்த வீடியோ முடியும் போது தோனி அந்த வீடியோவை பார்ப்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம் ஒரு பதிவை செய்துள்ளது. அதில் பேட்ட படத்தில் இடம்பெறும் காட்சியின் படத்தை பதிவிட்டு ரிஷப் பந்த்தின் வீடியோவிற்கு தோனியின் பதில் என ட்வீட் செய்துள்ளனர். இதை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close