[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

தென்னாப்பிரிக்காவில் சரித்திர சாதனை படைக்குமா இலங்கை?

sl-in-with-a-chance-of-creating-history-after-sa-crumble

தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்று, சாதனை படைக்கும் வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் அணி பெற்றுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை  அணி திரில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 222 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 60 ரன்னும் விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பெர்னாண்டோ, ரஞ்சிதா தலா 3 விக்கெட்டையும் டி சில் வா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 154 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா மட்டும் 42 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட்டும் ஆலிவர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் 128 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் டுபிளிசிஸ் அரை சதமும் அம்லா 32 ரன்னும் மார்க்ரம் 18 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்கள். இலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி, 196 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்துள்ளது. ஒஷாடா பெர்னாண்டோ 17 ரன்னுடனும் குசால் மெண்டிஸ் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 8 விக்கெட் கையில் உள்ள இலங்கை வெற்றி பெற 137 ரன்கள் தேவை. 

இந்த டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையைப் படைக்கும்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close