[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

 “உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும்” - சுனில் கவாஸ்கர்

sunil-gavaskar-has-an-advice-for-virat-kohli-and-co-on-debatable-world-cup-2019-clash-with-pakistan

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ -முகமது அமைப்பு ஈடுட்டது. இதையடுத்து அந்த நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது எனவும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை புறக்கணிக்க வேண்டும் என இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தினார். 

ஆனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘இந்தியா டுடே’ செய்திக்கு பேட்டியளித்தார். அப்போது,  “உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி  விளையாடினால் இந்தியாதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாம் விளையாடாமல் போனால், பாகிஸ்தான் வெற்றி பெறும். 

இதனால் அவர்கள் எளிதில் வாங்கும் இரண்டு புள்ளிகளை விடக்கூடாது. உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை இந்திய அணி  தோற்கடித்துள்ளது. அதனால் பாகிஸ்தான் அணி  போட்டியில் முன்னோக்கிச் செல்லாமல் இருக்க நாம் முட்டுக்கட்டை போட வேண்டும்.

ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடுவோமா என்ற கேள்விக்கு நான் நாட்டின் பக்கமே நிற்கிறேன். இந்திய அரசு என்ன முடிவு செய்தாலும் அதற்கு கட்டுப்படுகிறேன். நாம் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியாவுக்குதான் இழப்பு.” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close