[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம் !

punjab-cricket-association-removes-pictures-of-pakistani-players-from-mohali-stadium

காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்பான புகைப்படங்களை பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி புல்வாமாவில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையைச்  சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் இந்திய அளவில் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு 200 சதவிதமாக சுங்க வரியை உயர்த்தினார். 40 சிஆர்பிஎப் வீரர்களின் மறைவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் எதிர்ப்பை பாகிஸ்தான் பாடகர்கள் இந்திய இசையில் பாட தடை விதிக்க மகாராஷ்டிரா நவநிர்மான் சேவா அமைப்பினர் வலியுறுத்தினர். 

காஷ்மீர் தாக்குதலால்  இந்தியாவைச் சேர்ந்த பலரும் பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்பான புகைப்படங்களை நீக்கியுள்ளது. இம்ரான் கான், வாசிம் அக்ரம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புகைப்படங்கள் பல புகைப்படங்களை நீக்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சிங்லா, புல்வாமா தாக்குதலால் இந்தியாவே அதிர்ச்சியில் உள்ளது. பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை நீக்கவேண்டுமென்பது நாங்கள் எடுத்த முடிவு. வேறு யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் புகைப்படம் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close