[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

தரவரிசையில் புதிய உச்சத்தை தொட்டார் குல்தீப் யாதவ்

kuldeep-yadav-claims-career-best-t20i-rank-despite-india-s-series-loss-in-new-zealand

டி20 கிரிக்கெட் சர்வதேச தரவரிசையில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் புதிய உச்சத்தை எட்டியுள்ளார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோற்றது. நேற்று ஹாமில்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் மட்டும் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் சாய்த்தார். 

இந்நிலையில், ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 728 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 793 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான்(720), இமாத் வாசிம்(705) மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளனர். 

இந்திய அணியில் சாஹல் 17, புவனேஸ்வர்குமார் 18வது இடங்களில் உள்ளனர். இந்தத் தொடரில் சரியாக விளையாடாததால் சாஹல் 6 புள்ளிகள் குறைந்துள்ளார். குர்ணால் பாண்ட்யா 39 இடங்கள் முன்னேறி 58வது இடத்தை பிடித்துள்ளார்.

டி20 பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 885 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.  இந்திய அணி தரப்பில் முதல் பேரில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மட்டும் இடம் பிடித்துள்ளனர். ரோகித் 698 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ராகுல் 677 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close