[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கடைசி டி20 போட்டி: மந்தனா போராட்டம் வீண், இந்திய மகளிர் அணி தோல்வி

new-zealand-women-s-cricket-team-won-another-last-ball-thriller

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது. 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டி கொண்ட டி20 தொடரில், வெலிங்டனில் நடந்த முதல் போட்டியிலும் ஆக்லாந்தில் நடந்த 2 வது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. 

(மந்தனா)

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷோபி டிவைன் 52 பந்துகளில் 72 ரன் எடுத்தார். கேப்டன் எமி சேட்டர்த்வெயிட் 23 பந்துகளில் 31 ரன் எடுத்தார். பின்னர் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி ஆட்டத்தைத் தொடங்கியது. 

தொடக்க வீராங்கனை புனியா ஒரு ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீராங்கனை மந்தனா, பந்தை பல திசைகளிலும் விளாசித் தள்ளினார். அடுத்து வந்த ரோட்ரிகுயஸ் 21 ரன்னிலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 ரன்னிலும் வெளியேறினாலும் மந்தனா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர், 62 பந்துகளில் ஒரு சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 86 ரன் எடுத்திருந்தபோது டிவைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது. அடுத்து மிதாலி ராஜூடன் தீப்தி சர்மா இணைந்தார். 
இருவரும் நிதானமாக ஆடினர். 

(ஷோபி டிவைன்)

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன் தேவை என்ற நிலை. காஸ்பரெக் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட மிதாலி ராஜ் பவுண்டரிக்கு அதை விரட்டினார். அடுத்து ஒரு ரன் எடுத்து மறுமுனை வந்தார். அடுத்தடுத்த பந்துகளில் தீப்தி சர்மா ஒரு பவுண்டரி, இரண்டு, ஒன்று என்று எடுக்க கடைசி பந்தில் வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்தை எதிர்கொண்ட மிதாலி ராஜால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது. மிதாலி ராஜ் 24 ரன்களும் தீப்தி சர்மா 21 ரன்களும் எடுத்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close