[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

“ரிஷப்பை அழைத்து தோனி சொன்ன ஐடியா” - வைரலான வீடியோக்கள்..!

harbhajan-singh-explains-how-ms-dhoni-helped-rishabh-pant-bat-well-against-new-zealand-in-2nd-t20i

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு தோனி எப்படி உதவினார் என்பது குறித்து சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 158 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய இந்தியா 18.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 50, ஷிகர் தவான் 30 ரன்கள் எடுத்தனர். விஜய் சங்கர் 14 ரன்னில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட்டுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை தேடித் தந்தது. ரிஷப் பண்ட் 40, தோனி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

                

நேற்றைய போட்டி முடிந்த பின்னர் வழக்கம்போல் தோனி பற்றி இரண்டு விஷயங்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. ஒன்று நியூசிலாந்து வீரர் சோதியின் பந்தை தோனி எதிர் கொண்ட விதம். அதாவது, 16-வது ஓவரில் சோதி வீசிய பந்தினை இறங்கி அடிக்க முற்பட்டார் தோனி. ஆனால், அந்த பந்தினை ஒயிடாக வீசினார் சோதி. தோனி அதனை அடிக்காமல் விட்டுவிடும் பட்சத்தில் அவர் ஸ்டம்பிங் செய்யப்படுவார். ஆனால், தோனி தன்னுடைய ஒற்றை கையால் பந்தினை லாவகமாக அடித்து சிங்கிள் ஓடினார். இது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. 

                   

அதேபோல், ரிஷப் பண்ட்டினை அழைத்து தோனி பேசிய வீடியோவும் நேற்று வைரல் ஆனது. போட்டியின் போது ரிஷப் பண்ட்டுக்கு தோனி எப்படி உதவினார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், “பண்ட் தனக்கான வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். பண்ட் சில ஷாட்களை மிகவும் கேசுவலாக அடித்தார். உடனே தோனி அவரிடம் வந்து பேசினார். அந்த தருணத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து அவரிடம் விளக்கினார். அதன்பின்னர், பந்து தரையில் பட்டு செல்லும்படியான ஷாட்களை மட்டுமே அடித்தார். அதாவது பாதுகாப்பான ஷாட்கள். அடிப்பதற்கு ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்தார்.

ஒவ்வொரு வாய்ப்பும் ரிஷப்பை உலகக் கோப்பை அணிக்கு நெருக்கமாக கொண்டு செல்லும். குறிப்பாக, இதேபோல் அவர் ரன்களை அடித்துக் கொண்டிருந்தார் நல்ல வாய்ப்பு உள்ளது. இந்திய அணிக்கு தேவைப்படும் ஒரு எக்ஸ் வீரராக அவர் இருப்பார் என்று நினைக்கிறேன். ஆட்டத்தை மாற்றும் தன்மை அவரிடம் உள்ளது” என்றார்.

          

அதேபோல், தோனி பேட்டிங் செய்ய உள்ளே வந்தபோது, மைதானத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோன்ற வரவேற்பு ஆஸ்திரேலியாவிலும் அவருக்கு இருந்தது. தோனி மைதானத்திற்குள் வரும் வீடியோவும் நேற்று வைரல் ஆனது.

 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close