வெளிநாட்டு ஆடுகளங்களில் இப்போதைக்கு அஸ்வினை விட குல்தீப் யாதவ்தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என இந்திய
கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4
-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி
இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பல்வேறு கேள்விகளுக்கு
பதிலளித்தார் அதில் " குல்தீப் யாதவ் மிகச்சிறந்த முறையில் பந்து வீசி வருகிறார். டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளும்
எடுத்துவிட்டார். வெளிநாட்டு ஆடுகளங்களில் ஒரு ஸ்பின்னரை வைத்து மட்டும் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்,
குல்தீப் யாதவ்தான் எங்களின் முதல் சாய்ஸ். எல்லோருக்கும் ஒரு நேரம் இருக்கிறது. (ரவிச்சந்திரன் அஸ்வினை குறிப்பிடுகிறார்) இப்போது குல்தீப்தான் இந்திய அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர்" என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த ரவி சாஸ்திரி " ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் பந்து வீச்சை மிகவும் ரசித்தேன். இனி வரும் காலம் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களின் காலம் (wrist spin).எனவே வெளிநாட்டு ஆடுகளங்களில் குல்தீப் யாதவைதான் நாங்கள் ஆடும் லெவனில் தேர்ந்தெடுப்போம்" என கூறினார் அவர். ரவி சாஸ்திரியின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரவி சாஸ்திரியின் இந்தப் பேட்டி குறித்து பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போகலே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "குல்தீப்தான் வெளி நாட்டு ஆடுகளங்களில் சிறந்த ஸ்பின்னர் என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால், இந்திய துணை கண்டத்தில் அஷ்வினின் சாதனையை எவராலும் ஈடு செய்ய முடியாது. இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 342 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்!
சட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !