[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

‘சிக்ஸர் பாண்ட்யா’ ஆகும் ஹர்திக் - இது 5வது ஹாட்ரிக் !

india-vs-new-zealand-hardik-pandya-hits-hat-trick-of-sixes-for-5th-time-in-career

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய 5வது ஹாட்ரிக் சிக்ஸரை பதிவு செய்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கில் ராயுடு 90, விஜய் சங்கர் 45, ஹர்திக் பாண்ட்யா 45, கேதர் ஜாதவ் 34 என்று அசத்தினர். அதேபோல் பந்துவீச்சில் சாஹல் 3, சமி 2, பாண்ட்யா 2 விக்கெட் எடுத்தனர். 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.  

சர்ச்சைக்கு பின்னர் அசத்தும் பாண்ட்யா

பெண்கள் குறித்து சர்ச்சையில் சிக்கிய பாண்ட்யா மீண்டும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் சாய்த்தார். பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. 4வது போட்டியில் 16 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, இன்றையப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தினார். அதிரடியாக விளையாடி 45 ரன்கள் எடுத்ததோடு, 2 விக்கெட்களையும் சாய்த்தார். 

இது 5வது ‘ஹாட்ரிக் சிக்ஸ்’

ஆஸ்ட்லே வீசிய 47வது ஓவரின் 2,3,4 ஆகிய பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார் பாண்ட்யா. மொத்த 5 சிக்ஸர்கள் இன்றையப் போட்டியில் அவர் அடித்தார். பாண்ட்யா இதற்கு முன்பாகவும் பல முறை ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 

2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஹாட்ரிக் சிக்ஸரை பாண்ட்யா பதிவு செய்தார். இடக்கை சுழற்பந்துவீச்சாளர் இமாத் வாசிம் பந்து வீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து இருந்தார். அதே தொடரில் சுழற்பந்துவீச்சாளர் ஷாதப் கான் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆல்ரவுண்டர் புஷ்பகுமாரா பந்துவீச்சில் பாண்ட்யா ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி இருந்தார். அதேபோல், சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆதம் ஜம்பா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். அந்த வரிசையில் ஆஸ்த்லே ஓவரை பதம் பார்த்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close