[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

eng-vs-windies-2nd-test-west-indies-won-by-10-wickets

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி, அபார வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணி களுக்கு இடையே இப்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி, அபார வெற்றி பெற்றது.

இரண்டவது டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவாவில் நடந்து வந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 187 ரன்னில் சுருண்டது. பேர்ஸ்டோ 52 ரன், மொயீன் அலி 60 ரன் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டுகளும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். பின்னர் தனது முதல் இன்னிங் சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 306 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிராத்வெயிட் 49 ரன், கேம்பல் 47 ரன், பிராவோ 50 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பிராட், மொயின் அலி தலா 3 விக்கெட்டும் பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 132 ரன்னுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகப் பட்சமா க பட்லர் மட்டும் 24 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் கெமர் ரோச், ஹோல்டர் தலா 4 விக்கெட்டு களை சாய்த்தனர். ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினார்.
 
பின்னர் வெற்றிக்கு 14 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் 17 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close