[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா

நாளைய போட்டியில் தோனி ஆடுகிறார்: சஞ்சய் பாங்கர் தகவல்!

ms-dhoni-to-return-from-injury-in-fifth-odi-sanjay-bangar

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டியில், அனுபவ வீரர் தோனி விளையாடுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடு கிறது. இப்போது, 4 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி, தொடரை வென்றுவிட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வியடைந்தது. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் போல்ட், கிராண்ட்ஹோம் ஆகியோரின் ஸ்விங்-கை சமாளிக்க முடியாமல், இந்திய வீரர்கள் அடுத்த டுத்து விக்கெட்டு களை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி, 19.1 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியிலும் இதற்கு முந்தைய போட்டியிலும் காயம் காரணமாக, அனுபவ வீரர் தோனி, ஆடும் லெவனில் இல்லை. இதனால் வெலிங்டனில் நாளை நடைபெறும், 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் அவர்  ஆடுவது உறுதியாகி இருக்கிறது. இதை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித் துள்ளார்.

’’தோனியின் காயம் குணமாகி விட்டது. நாளை நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்பார்’’ என்றார் பாங்கர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close