[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கொண்டாட மறந்துபோன ‘ரோகித்200’ - விஸ்வரூபம் எடுத்த ‘ஹிட் மேன்’ பயணம்

india-vs-new-zealand-rohit-sharma-14th-indian-to-appear-in-200-odis

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தன்னுடைய 200வது ஒருநாள் போட்டி ரோகித் சர்மாவுக்கு மகிழ்ச்சியானதாக அமையவில்லை. இத்தனைக்கும் 200வது ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்படும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இருந்தும், மகிழ்ச்சியை தாண்டி மிகவும் சோகமான ஒரு நாளாக நேற்று அமைந்துவிட்டது. ஹாமில்டனில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. 

       

இருப்பினும், ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அவரது 200வது போட்டியை முன்னிட்டு பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடினர். இந்திய அணிக்காக 200 போட்டிகளை விளையாடிய 14வது வீரர் ரோகித். அதேபோல், சர்வதேச அளவில் 79வது வீரர். இந்திய அணியில் சச்சின், டிராவிட், கங்குலி, தோனி, கும்ளே, ஸ்ரீநாத், அசாருதீன், சேவாக், ஹர்பஜன் மற்றும் விராட் கோலி ஆகியோர் 200 போட்டிகளில் விளையாடியுள்ளனர். 

விஸ்வரூபம் எடுத்த ரோகித்:

உண்மையில் கடந்த சில ஆண்டுகளில் ரோகித் வியத்தகு வளர்ச்சியை அடைந்துவிட்டார் என்றே சொல்லலாம். அவரது ஒருநாள் போட்டி பயணத்தை இரண்டு நூறு போட்டிகளாக பிரித்து பார்த்தால் சரியாக இருக்கும். 

      

முதல் நூறு போட்டிகளில் வெறும் 2,480 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில், 2 சதம், 17 அரைசதங்கள் மட்டுமே அடங்கும். ஆனால், அடுத்த 100 போட்டிகளில் ரோகித் சர்மா விஸ்வரூபம் எடுத்தார். இரண்டாவது நூறு போட்டிகளில் அவர் 5,326 ரன்கள் குவித்துள்ளார். அதில், 20 சதங்கள் விளாசியுள்ளார். பேட்டிங் சராசரி 58.52.

ரோகித் ரன் வேட்டை:

2007 ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய ரோகித் சர்மாவுக்கு, முதல் 6 ஆண்டுகள் அவ்வளவு சரியாக அமையவில்லை. ரோகித் சர்மா கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர் தோனி. 4, 5வது இடங்களில் விளையாடி வந்த அவரை தொடக்க வீரராக களமிறக்கினார்.

           

2013 முதல் தொடக்க வீரராக அவர் விளையாடினார். தொடக்க வீரராக விளையாடியது முதல் ரோகித் சர்மாவின் ஆட்டம் வேற லெவலுக்கு சென்றுவிட்டது. ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை குவித்து தந்தார்.

200 ஒருநாள் போட்டிகளில், 194 இன்னிங்சில் ரோகித் விளையாடி 7,806 ரன்களை குவித்துள்ளார். மொத்தம் 22 சதங்களும், 39 அரைசதங்களும் அடித்துள்ளார். பேட்டிங் சராசரி 47.89. ஸ்டிரைக் ரேட் 88.46. அதிகபட்ச ரன் 264.

இரட்டை சதங்களின் நாயகன்:

ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதங்கள் விளாசிய ஒரே வீரர். இலங்கை அணிக்கு எதிராக இரண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இரட்டை சதத்தை அடித்துள்ளார். சதத்தை கடந்துவிட்டால் ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் அனல் பறக்கும். சிக்ஸர்களாக பறக்க விடுவார். அதனால், இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் தோனியின் இடத்தை பிடித்துவிட்டார். இருவரும் தலா 215 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர்.

    

சதங்களை பொறுத்தவரை இந்திய அணியில் சச்சின் 49, கோலி 39 ஆகியோருக்கு அடுத்து கங்குலி உடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இன்னும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் கங்குலியை அவர் முந்திவிடுவார். அதேபோல், சர்வதேச அளவில் கெயில்(23) அடித்த சதங்களை எட்டுவார்.

இந்திய அணியின் இரு நட்சத்திரங்கள்.

இந்திய அணியைப் பொருத்தவரை இரு முக்கியமான நட்சத்திரங்களாக கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இருக்கிறார்கள். இந்திய அணியில் ரன் மிஷினாக இருப்பவர் கோலி. தொடர்ச்சியாக தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறார்.

          

அதேபோல், இந்திய அணியின் வெற்றிகளுக்கு பல நேரங்களில் முக்கிய காரணமாக இருப்பவர் ரோகித் சர்மா. இந்திய அணி குறித்து அணியின் முன்னாள் வீரர் டாமினிக் கார்க் கூறுகையில், ‘விராட் கோலியின் ஆட்டத்தால் ரோகித் சர்மாவை மக்கள் மறந்துவிடுகிறார்கள்’ என்று கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மாவின் முதல் 10 அதிகபட்ச ரன்கள்:-

1. 264(173) - எதிரணி இலங்கை - 13, நவ., 2014 (இந்தியா 153 ரன் வித்தியாசத்தில் வெற்றி)
2. 209(158) - எதிரணி ஆஸ்திரேலியா - 2, நவ., 2013 (இந்தியா 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி)
3. 208*(153) - எதிரணி இலங்கை - 13, டிச., 2017 (இந்தியா 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி)
4. 171(163) - எதிரணி ஆஸ்திரேலியா - 12, ஜன., 2016 (ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)
5. 162(137) - எதிரணி வெஸ்ட் இண்டீஸ் - 29, அக்., 2018 (இந்தியா 224 ரன் வித்தியாசத்தில் வெற்றி)
6. 152*(117) - எதிரணி வெஸ்ட் இண்டீஸ் - 21 அக்., 2018 (இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)
7. 150(133) - எதிரணி தென்னாப்ரிக்கா - 11, அக்., 2015 (தென்னாப்ரிக்கா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி)
8. 147(138) - எதிரணி நியூசிலாந்து - 29, அக்., 2017 (இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி)
9. 141*(123) - எதிரணி ஆஸ்திரேலியா - 16, அக்., 2013 (இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)
10. 138(139) - எதிரணி ஆஸ்திரேலியா - 18 ஜன., 2015 (ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)

    

கேப்டனாக ஜொலிக்கும் ரோகித்

இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் துணைக் கேப்டனாக ரோகித் செயல்பட்டு வருகிறார். விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் நாட்களில் அவர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை 90 சதவீதம் வெற்றியை இதுவரை தக்க வைத்துள்ளார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close