[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.14 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்

92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கிய நியூசிலாந்து - அபார பந்துவீச்சை வெளிப்படுத்துமா இந்தியா?

india-vs-new-zealand-4th-odi-live-cricket-score-streaming

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் வெற்ற பெற்ற இந்திய அணி, மவுன்ட் மாங்கனுயி-ல் நடந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி, ஹாமில்டனில் இன்று நடந்து வருகிறது.

கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். இது அவருக்கு 200 வது ஒரு நாள் போட்டி. கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த தோனி, இன்றைய போட்டியிலும் ஆடவில்லை.

நான்காவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்கள் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 7 ரன்களிலும், ஷிகர் தவான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஷுப்மன் கில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார். சரிவில் இருந்த இந்தியாவை மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராயுடுவும், கார்த்திக்கும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதற்கடுத்து ஜாதவும் புவனேஷ்குமாரும் தலா 1 ரன்களில் அவுட்டாகினர். 

தாக்குபிடிப்பார் எதிர்பாக்கப்பட்ட ஹர்த்திக் பாண்டியா ஒரு ஓவரில் அடுத்தடுத்து 3 பந்துகளை பவுண்ரிக்கு தள்ளினார். ஆனால் அந்த சந்தோஷம் ரசிகர்கள் மத்தியில் முடிவதற்குள் அவரும் 16 ரன்னில் அவுட்டானார்.

இவரையடுத்து களம் இறங்கிய குல்தீப் யாதவ் 15 ரன்னிலும், கலீல் அகமது 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சாகல் மட்டும் 37 பந்துகளுக்கு 18 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி 30.5 ஓவருக்கு 92 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர் போல்ட் 5 விக்கெட்டுகளையும் கிரேண்ட்தோம் 3 விக்கெட்டுகளையும் அஸ்டில் மற்றும் ஜேம்ஸ் நீசம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி முதல் பந்தில் 6 அடித்து அபாரமாக தொடங்கியுள்ளார் குப்தில். அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்ரிக்கு விளாசினார். ஆனால் நான்காவது பந்தில் குப்திலை அவுட்டாக்கினார் புவனேஷ்குமார். இதனால் இந்திய அணி அபார பந்துவீச்சை வெளிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிருக்கின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close