[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அடுத்த போட்டியிலும் தோனி சந்தேகம்தானா? - அணியில் யாருகெல்லாம் வாய்ப்பு?

indian-wicket-keeper-and-senior-participant-ms-dhoni-is-doubtful-for-the-fourth-odi-versus-new-zealand

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியிலும் தோனி விளையாடுவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய தோனி, தசைப்பிடிப்பு காரணமாக மூன்றாவது போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இது தோனி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

      

உடல் நிலை காரணமாக தோனி போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது அரிது. 2003ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடி வருகிறார். முதல்முறையாக வைரல் காய்ச்சல் காரணமாக அயர்லாந்து-தென்னாப்ரிக்கா தொடரில் தோனி விளையாடவில்லை.

பின்னர், தசைப்பிடிப்பு காரணமாக 2007ம் ஆண்டில் தசைப்பிடிப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உட்கார வைக்கப்பட்டார். தற்போது, மூன்றாவது முறையாக தசைப்பிடிப்பு காரணமாக அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. 

              

மீதமுள்ள இரண்டு விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோனியும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தோனியின் தசைப்பிடிப்பு காயம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து அணி நிர்வாகம் இதுவரை தெரிவிக்கவில்லை.

உலகக் கோப்பை தொடருக்கு முழுவதும் தயாராவதை கருத்தில் கொண்டு அடுத்தப் போட்டியிலும் தோனிக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விராட்கோலி இல்லாத நிலையில், துணை கேப்டன் ரோகித் சர்மா அணியை வழிநடத்திச் செல்வார். 

          

தோனிக்கு பதிலாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்தார். அதேபோல், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். அதனால், அடுத்தப் போட்டியிலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் என்று தெரிகிறது. இருப்பினும், தோனி விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

           

அதேபோல், விராட் கோலிக்கு பதிலாக 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான அணியில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில்க்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது அவருக்கு அறிமுகப் போட்டி. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close