[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“சர்ச்சையால் பாண்ட்யா அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளார்” - விராட் கோலி

controversy-will-help-hardik-pandya-scale-new-heights-in-his-career-virat-kohli

சர்ச்சையான பேச்சு ஹர்திக் பாண்ட்யாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. கடந்த ஆஸ்திரேலிய பயணத்தின்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த பாண்ட்யா, நியூஸிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் விளையாடினார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசிய பாண்ட்யா 45 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவரது வருகை இந்தியாவிற்கு மேலும் பலம் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. 

Image result for kohli pandya

இந்நிலையில் பாண்ட்யாவின் வருகை தொடர்பாக பேட்டியளித்த கோலி, “ஹர்திக் பாண்ட்யா போல் ஒரு நிலை ஏற்பட்டால், முடிவெடுக்க இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அனைத்தையும் கண்டுகொள்ளாமல் கடந்த செல்ல வேண்டும். மற்றொன்று அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, சரியான புதிய ஊக்கத்துடன் தொடர வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட்டை விட பிடித்தது எதுவும் இருக்காது. உங்கள் திறன் அனைத்தையும் அதில் செலுத்துங்கள். நீங்கள் கிரிக்கெட்டை மதித்தால், கிரிக்கெட் உங்களை மதிக்கும். இதில் ஆராய்ச்சி செய்வதற்கு ஒன்றுமில்லை. 

Image result for kohli pandya

பாண்ட்யா போன்ற நிலை ஏற்பட்டால் நீங்கள் எதையும் கூடுதலாக செய்யவேண்டாம். அதிலிருந்து நல்ல அனுபவங்களை கற்றுக்கொண்டு வெளிவர வேண்டும். அப்படி வந்துள்ளதால் பாண்ட்யாவின் கிரிக்கெட் வாழ்வு ஒருபடி உயர்ந்துள்ளது. இதுபோன்று பல கிரிக்கெட் வீரர்களை நாங்கள் பார்த்துள்ளோம். பாண்ட்யா அணிக்கு திரும்பியது மிகவும் நல்ல விஷயம். அவரால் அணி சமநிலை அடைந்துள்ளது. கடந்த போட்டியில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்” என்கிறார்.

பாண்ட்யாவுடன் சேர்த்து அணியிலிருந்து நீக்கப்பட்ட கே.எல்.ராகுல் தற்போது இந்திய ஏ அணியில் விளையாடி வருகிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close