[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

3வது ஒரு நாள் போட்டி: வந்தார் பாண்ட்யா, தோனிக்கு ரெஸ்ட்!

nzvind-3-rd-odi-pandya-in-ms-dhoni-has-been-rested

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. மவுன்ட் மாங்கனுயி-ல் நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி, வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3 வது போட்டி, மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடக்கிறது. 

பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, இந்தப் போட்டியிலும் அதே தீவிரத்துடன் விளையாடும். ’சைனாமேன்’ குல்தீப் சுழலை சந்திக்க நியூசிலாந்து வீரர்கள் தொடர்ந்து திணறி வருகிறார்கள். அதோடு, சாஹலிடமும் அவர்கள் சரண்டர் ஆகிவிடுகிறார்கள். முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் ஆகியோர் அவ்வப்போது விக்கெட் வீழ்த்தி வருகின்றனர். இதனால் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. சர்ச்சை பேச்சால் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்று அணிக்கு திரும்பியுள்ளார். அவர் வரவும் கூடுதல் பலம் அளிக்கும். 


இந்திய அணியில் அனுபவ வீரர் தோனிக்கு, இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக, நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் செயல்படும். இந்த போட்டியில் தோற்றால் தொடரை இழக்கும் வாய்ப்பிருப்பதால், வெல்வதற்கு அந்த அணி வீரர்கள் கடுமையாகப் போராடுவார்கள். இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதற்கிடையே டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

அணி விவரம்:
இந்தியா:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி.

நியூசிலாந்து அணி:
கனே வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், முன்றோ, ராஸ் டெய்லர், லாதம், நிக்கோலஸ், சன்ட்னர், பிரேஸ்வெல், சோதி, பெர்குசான், போல்ட்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close