[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“லேசா காலை தூக்கினா.. ஆளையே தூக்கிடுவாறு தல”-  மற்றொரு மின்னல் ஸ்டம்பிங்

ms-dhoni-quick-as-a-flash-stumps-ross-taylor-awestruck-fans-cant-keep-calm

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோனி தன்னுடைய மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் ராஸ் டெய்லரை அவுட் ஆக்கி அசத்தினார். தோனிக்கு ஒருநாள் போட்டிகளில் இது 119வது ஸ்டம்பிங். 

ஒரு கேப்டனாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள தோனி, தற்போது ஒரு விக்கெட் கீப்பராக தனது மேஜிக்கை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். ஸ்டம்பிற்கு பின்னால் நின்று கொண்டே பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை சொல்வது. பீல்டிங்கை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என விராட் கோலியின் பாதி பணியை தோனியே மைதானத்தில் செய்து முடித்துவிடுகிறார். அதோடு, சர்வதேச அளவில் நெம்பர் ஒன் விக்கெட் கீப்பர் என்பதையும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவ்வளவு துல்லியம், சுறுசுறுப்பு. 

            

கடந்த போட்டியில் கடைசி விக்கெட் ஆன பவுல்ட்டை குல்தீப்பை வைத்து சொல்லி அடித்தார். அதேபோல், அதற்கு முந்தைய விக்கெட்டான பெர்குசனை தன்னுடைய அசாத்திய ஸ்டம்பிங்கினால் அவுட் ஆக்கினார். குல்தீப் ஓவரில் அவ்வளவு துல்லியமாக அந்த விக்கெட்டை சாய்த்தார் தோனி. 

              

இந்நிலையில்தான், மவுண்ட் மௌன்கயில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் ராஸ் டெய்லரை ஸ்டம்பிங்க் மூலம் வீழ்த்தினார். கேதர் ஜாதவ் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் இந்த விக்கெட் வீழ்ந்தது. தடுப்பாட்டம் ஆட டெய்லர் லேசாக காலை மேலே தூக்கி ஆடினார். பந்து அவரை தாண்டி பின்னால் செல்ல, அதனை வாங்கி மின்னல் வேகத்தில் பெய்ல்ஸை தட்டினார் தோனி. நீண்ட நேரம் மூன்றாம் நடுவரின் ஆய்வுக்கு பின்னர் அவுட் கொடுக்கப்பட்டது. 0.8 நொடி வேகம்தான் இந்த ஸ்டெம்பிங். 

         

இந்தப் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரோகித் சர்மா 87, ஷிகர் தவான் 66 அடித்து வெற்றிக்கு உதவினர். அதேபோல், பந்துவீச்சில் குல்தீப் 4 விக்கெட் சாய்த்தார். 

       

2018ம் ஆண்டு முழுவதுமே தோனி மிகவும் சொதப்பலான பேட்டிங் செய்து வந்தார். அதனால், அவர் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில்தான், இந்த ஆண்டு தோனிக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து அசத்தினார்.

            

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில்,  தோனி தன்னுடைய பங்கிற்கு கடைசி கட்டத்தில் 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த 4 போட்டிகளில் 241 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக நாட் அவுட் ஆகியுள்ளார். 

 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close