[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

உமேஷ் வேகத்தில் வீழ்ந்தது கேரளா: ரஞ்சி ஃபைனலில் விதர்பா அணி!

ranji-trophy-fiery-umesh-guides-vidarbha-into-final

உமேஷ் யாதவின் சிறப்பான பந்துவீச்சில் கேரள அணி சுருண்டதை அடுத்து, விதர்பா அணி, ரஞ்சி போட்டியின் பைனலுக்குள் நுழைந்துள்ளது.

உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபி தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு நுழைந்த கேரள அணி, நடப்பு சாம்பியன் விதர்பாவை எதிர்கொண்டது. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி, கேரள மாநிலம் வயநாட்டில் நடந்து வந்தது.

கேரள அணி, முதல் இன்னிங்ஸில் 106 ரன் எடுத்தது. விதர்பா வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசி, 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா, 208 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேரள அணி தரப்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளும்  பசில் தம்பி 3 விக்கெட்டுகளும் நிதீஷ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் கேரள அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. உமேஷ் யாதவ் மற்றும் யாஷ் தாகூரின் சிறப்பான பந்துவீச்சில், அந்த அணி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். இதையடுத்து அந்த அணி, 24.5 ஓவரில் 91 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உமேஷ் 5 விக்கெட்டும் தாகூர் 4 விக்கெட்டும் கைப்பற் றினர். 

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகாவும் சவுராஷ்ட்ரா அணியும் மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, விதர்பா அணியுடன் இறுதி போட்டியில் மோதும். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close