[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

’பாகிஸ்தான் கேப்டனை மன்னித்துவிட்டோம்’: டு பிளிசிஸ்

we-forgive-him-because-he-said-sorry-faf-du-plessis

இனவெறி பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டதால், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமதுவை மன்னித்து விட்டோம் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டுபிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட் டியில் பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வென்றது. இந்நிலையில் 2வது ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நடைபெற் றது. இதில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்த வெற்றிக்கு மூன்றாவது வீரராக களமிறங்கிய, வான்டர் டஸ்செனும் பெலுகுவாயோவும்தான் காரணம். இவர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமது ஆத்திரத்தில், ’’கருப்பு பயலே, இன்று உன் அம்மா எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்?’’ என இந்தியில் பேசியுள்ளார். இது  ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது.

சர்ப்ராஸ் அகமதுவின் இந்த இனவெறி பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்பிராஸின் இத்தகையை பேச்சுகளை ஆதரிக்கப்போவதில்லை எனவும்  கூறியுள்ளது. சர்ப்ராஸின் செயல்பாடுகள் மீது போட்டி அதிகாரி கள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டால் ஐ.சி.சி.யால் சர்பிராஸ் விளையாட தடை விதிக்கக்கூடிய நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார் சர்பிராஸ் அகமது. ’’யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில் லை.  யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள் ளது. இனி இதுப்போன்ற தவறுகள் நடக்காது” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஐசிசி ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகலே, சர்பிராஸ் அகமதுவை சந்தித்து இது குறித்துப் பேசினார்.

இந்நிலையில் சர்பிராஸ் மன்னிப்புக் கேட்டதால், அவரை மன்னித்துவிட்டதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் டுபிளிசி ஸ் தெரிவித்துள்ளார். ‘’தென்னாப்பிரிக்காவுக்கு விளையாட வரும் போது வீரர்கள் எச்சரிக்கையாக பேச வேண்டும். அவர் தன து செயலுக்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டுவிட்டார். நாங்கள் அவரை மன்னித்துவிட்டோம். அதற்காக இந்த விவகாரத் தை சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்று அர்த்தம் இல்லை. பெலுக்வாவ்யோ இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் இதை கவனிக்கவும் இல்லை. மொழி தெரியாததால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close