[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கடைசி 2 ஒரு நாள் போட்டி, டி20 தொடரில் விராத்துக்கு ரெஸ்ட்!

kohli-rested-for-last-two-new-zealand-odis

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை அடுத்து நியூசிலாந்து சென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, நாளை மறுநாள் நடக்கிறது. 

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆடிவருவதால் அவருக்கான பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு இந்த ஓய்வு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close