[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து பேட்டிங்

kiwis-bats-first-in-1st-odi-against-india-at-napier

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. நேப்பியரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்வுள்ள போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணி அண்மையில் ஆஸ்​தி​ரே​லிய சுற்​றுப் ​ப​ய​ணத்​தில் டெஸ்ட், மற்​றும் ஒரு நாள் தொடர்​களை தலா 2-1 என முதன்​மு​றை​யாக கைப்​பற்றி வர​லாறு படைத்​தது. 

உல​கக் கோப்பை போட்டி 2019-க்கு தயா​ரா​கும் வகை​யில் இங்​கி​லாந்து மைதா​னங்​க​ளின் தன்மை, சூழல் உடைய நியூ​ஸி​லாந்​தில் 5 ஆட்டங்​கள் கொண்ட ஒரு​நாள் மற்​றும் 3 ஆட்டங்​கள் கொண்ட டி20 தொ​டர்​க​ளில் இந்​திய அணி ஆடு​கி​றது. முதல் ஒரு நாள் ஆட்டம் நேப்​பி​ய​ரில் 7.30 மணிக்கு தொடங்​கு​கி​றது.



இந்​திய ஒரு நாள் அணி​யில் தொடக்க வரிசை ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விரோட் கோலி​யு​டன் வலு​வாக உள்​ளது, 
எனி​னும் ஷிகர் தவன் ஆட்டத்​தி​றன் கேள்​விக்​கு​றி​யாக உள்​ளது. 9 ஆட்டங்​க​ளில் அவ​ரது அதி​க​பட்ச ஸ்கோர் 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.நியூ​ஸி​லாந்​தில் உள்ள கிரிக்கெட் மைதா​னங்​கள் பொது​வாக சிறி​ய​வை​யாக உள்​ளன. மேலும் நியூஸி. அணி​யில் டிரென்ட் பெளல்ட், டிம் செளதி, லாக்கி பெர்​கு​ஸன் உள்​ளிட்ட அபா​ய​க​ர​மான சிறந்த வேகப்​பந்து வீச்​சா​ளர்​கள் உள்​ள​னர். 

இந்திய அணி: தவான், ரோகித் சர்மா, கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சமி, சாஹல்.

நியூசிலாந்து அணி: குப்டில், மன்ரோ, வில்லியம்சன், டெய்லர், நிக்கோல்ஸ், டாம் லேதம், மிட்சல் சான்ட்னர், பிரேஸ்வெல், சவுதி, பெர்கியூசன், போல்ட்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close