[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை

prithvi-shaw-confident-of-being-fully-fit-before-ipl

ஐபிஎல் தொடருக்கு முன்பாக காயத்தில் இருந்து குணமாகிவிடுவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா. இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அழைக்கப் பட்டிருந்தார். ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது காயம் அடைந்தார். இதனால் அந்த தொடரில் ஆட முடியாமல் இந்தியா திரும்பினார். காயத்தில் இருந்து குணமடைய தீவிர பயிற்சி எடுத்து வரும் பிருத்வி ஷா, ஐபிஎல் தொடருக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு விடுவேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, ’’எனக்கு ஏற்பட்ட காயம் கடுமையானது. பயிற்சி ஆட்டத்தின் போது பந்தை பிடிக்க முயன்றபோது, எனது கணுக்கால் முழுவதுமாக மடங்கிவிட்டது. அதனால்  பெரிய காயமாகிவிட்டது. இதனால் இரண்டாவது டெஸ்ட்டில் விளையாட முயன்றேன். வலி அதிகமாக இருந்ததால் முடியவில்லை.

ஆஸ்திரேலிய மைதானங்களில் விளையாட வேண்டும் என்பது என் ஆசை. அங்கு பவுன்ஸ் ஆகும் பந்துகளில் விளையாட எனக்கு பிடிக்கும். ஆனால், எதிர்பாராத காயத்தால் என் ஆசை நிறைவேறவில்லை. இருந்தாலும் இந்திய அணி தொடரை வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. காயம் காரணமாக சோர்வடைந்த எனக்கு அணி வீரர்கள் ஆதரவாக இருந்தார்கள்.

இப்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறேன். ஐபிஎல் தொடருக்கு முன்பாக முழுவதுமாக குணமடைந்துவிடுவேன் என நினைக்கிறேன்’’ என்றார். 

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடுகிறார் பிருத்வி ஷா.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close