[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா

பாண்ட்யா, ராகுலை அணியில் சேர்க்க வேண்டும்: சி.கே.கண்ணா!

let-hardik-pandya-kl-rahul-play-while-inquiry-is-on-bcci-president

விசாரணை நிலுவையில் இருந்தாலும் ஹர்திக் பாண்ட்யா, ராகுல் ஆகியோரை அணியில் சேர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் கரண் ஜோஹரின் ’காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இது பெரும் பிரச்னையானது. இதையடுத்து, இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவில் விளையாட சென்றிருந்த இருவரும் நாடு திரும்பினர்.


இவர்கள் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி, விசாரணை அதிகாரியை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் வர இருக்கிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய, பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டிக்கு மெயில் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘’இரண்டு வீரர்களும் செய்தது தவறுதான்.

அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர். இருந்தும் அவர்களை சட்டத்துக்கு புறம்பானவர்களாக பார்க்க வேண்டாம். விசாரணை நிலுவையில் இருந்தாலும் அவர்கள் சஸ்பெண்டை ரத்து செய்து, அணியில் சேர்க்க வேண்டும். நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருவரையும் சேர்க்க அனுமதிக்க வேண்டும். வளர்ந்து வரும்  வீரர்கள், தங்களது தவறை திருத்திக் கொள்ள வாய்ப்புளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close