பாகிஸ்தானில், பிரபலமான கிரிக்கெட் வீரராக இருப்பது விராத் கோலிதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறினார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதுபற்றி வாசி ம் அக்ரம் கூறும்போது, “தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, சிறந்த யார்க்கர்களை வீசுகிறார். அதுதான் அவர் பலம். அவரது ஆக் ஷன் புதிதாக இருக்கிறது. மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து மாறுபட்டு இருக்கிறது. பந்தை அருமையாக, ஸ்விங்கும் செய்கிறார்.
பாகிஸ்தானிலிருந்து நானும் இந்தியாவிலிருந்து பும்ராவும் வந்தாலும் நாங்கள் டென்னிஸ் பந்தில் ஆடி உருவானவர்கள். இருபுறமும் கட்டிடங் கள் இருக்கும் போது, நேராக ஆடியாக வேண்டும். அதனால்தான் பவுலர்களும் லெந்தில் வீசி பழக வேண்டும். ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது பெரிய சாதனை, இதை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. ’இது பலவீனமான ஆஸ்திரேலிய அணி, அதனால்தான் வீழ்த்தப்பட்டார்கள்’ என்று சொல்வதை ஏற்க மாட்டேன்.
விராத் கோலியிடம் சரியான மனநிலை இருக்கிறது. அதுதான் அவரது பலம். பாகிஸ்தானிலும் அவர்தான் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருக் கிறார். அங்கு புதிதாக, திறமையான கிரிக்கெட் வீரர் உருவானால், அவரை விராத் கோலியுடன் தான் ஒப்பிடுகிறார்கள்’’ என்றார்.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !