[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

ஆஸி, நியூசி. ஒரு நாள் போட்டி: பும்ராவுக்கு ஓய்வு, சிராஜூக்கு வாய்ப்பு!

jasprit-bumrah-rested-for-remainder-of-australia-and-nz-tour

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரையும் இந்திய அணி வென்று சாதனை படைத்தது. 71 ஆண்டுக்கு பிறகு இந்த தொடரை வென்றுள்ளது இந்திய அணி. இதையடுத்து வரும் 12 ஆம் தேதி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்கிறது.


 
ஆஸ்திரேலிய தொடரை முடித்துவிட்டு இந்திய அணி நியூசிலாந்து செல்கிறது. அங்கு விளையாடும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள் ளது, இந்திய கிரிக்கெட் வாரியம்.இதில் வேகபந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்டில் மொத்தம் 157 ஓவர்கள் வீசிய பும்ரா, 21 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சிறப்பாக பந்துவீசிய அவருக்கு ஓய்வு தேவை என்பதால், ஒரு நாள் தொடர்களுக்கு அவர் சேர்க்கப்படவில்லை என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் அணி விவரம்:
விராத் கோலி, ரோகித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், சிராஜ், கலீல் அகமது, ஷமி.

(சித்தார்த் கவுல்)

நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணி:
விராத் கோலி, ரோகித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர்குமார், சிராஜ், கலீல் அகமது, சித்தார்த் கவுல்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close