[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

“அப்பா பந்துவீசுப்பா” - 3 வயதில் தொடங்கி 30 வயதில் கிங் கோலி படைத்த வரலாறு

virat-kohli-success-life-story-3-year-to-30-year-life

இந்தியாவில் இன்று விராட் கோலியை தெரியாது என்று யாராவது கூறினால் அவரை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவிற்கு விராட் கோலி அனைவரிடமும் சென்று சேர்ந்துவிட்டார். இந்திய அணியில் சேர்ந்த சிறிய காலத்திலேயே விராட் கோலி சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரது பேட்டிங்கை பார்த்த அனைவரும், இவர் கண்டிப்பாக சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்று சொன்னார்கள். அதன்பின்னர் ஒரு கட்டத்தில் இந்தியா மட்டும் அல்ல எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு ரன்களை குவிக்கும் மிஷினாக மாறினார் கோலி. 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதற்கு இவரது பேட்டிங் ஒரு முக்கியக் காரணம்.

Image result for virat kohli

அன்றைய தினம் அணியிலேயே இளம் வீரர் கோலி தான். அதன்பின்னர் விஸ்வரூப வளர்ச்சி பெற்ற கோலி, தற்போது இந்திய வரலாற்றின் சிறந்த கேப்டன் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். ஏனென்றால் 72 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்தக் கேப்டனும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் வென்றதில்லை. அந்தச் சாதனை படைத்துள்ளார் கோலி. இதனால் இந்திய கிரிக்கெட் உலகமே அவரைக் கொண்டாடுகிறது. ஆனால் இந்த இடத்திற்கு அவர் வருவதற்கு 27 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அவரது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் தான் அது உங்களுக்கு புரியும்.

Image result for Virat kohli child photos

1988 ஆம் ஆண்டு டெல்லியில் வசித்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் விராட் கோலி. இவரது தந்தை பிரேம் கோலி ஒரு கிரிமினல் வழக்கறிஞர். தாய் சரோஜ் கோலி இல்லத்தரசி. கோலி தான் வீட்டில் கடைசி பையன். அவருக்கு விகாஷ் கோலி என்ற அண்ணனும், பாவ்னா கோலி என்ற அக்காவும் உள்ளனர். இன்று கோலி பேட்டிங்கில் ஒரு ஈடில்லா மனிதனாக உயர்ந்ததற்கு காரணம், அவருக்கு 3 வயது இருக்கும் போது வீட்டில் இருந்த தனது அண்ணின் கிரிக்கெட் பேட்டை எடுத்து, “அப்பா பந்துவீசுப்பா” என தன் தந்தையை பார்த்து கூறியுள்ளார். உடனே வீட்டில் இருந்த அனைவரும் “அடேங்கப்பா பெரிய பேட்ஸ்மேன் இந்தியாவுக்கு கிடைச்சுட்டாருப்பா” என சிரித்தபடியே குழந்தை கோலியை கொஞ்சியுள்ளனர். அன்று அவர்கள் சொன்னதைப்போல பெரிய பேட்ஸ்மேனாக, இல்லை., இல்லை., மிகப் பெரிய பேட்ஸ்மேனாக இன்று இந்தியாவிற்கு கோலி கிடைத்துவிட்டார்.

Image result for Virat kohli child photos

கோலி தனது தொடக்கப் படிப்பை உட்டம் நகரில் உள தனியார் பள்ளி ஒன்றில் படித்துள்ளார். பள்ளிநேரம் முடிந்ததும் வீட்டிற்கு வரும் கோலி தனது சீருடையை கூட கழட்டாமல் உடனே அருகே இருக்கும் கிரிக்கெட் மைதானத்திற்கு ஓடிவிடுவார். அங்கே தனது ஏரியா நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அப்போதே கோலியின் பேட்டிங்கை கண்டு அனைவரும் அசந்துபோவார்களாம். கோலியின் விக்கெட்டை எடுப்பது அனைவருக்குமே ஒரு கடினமான செயலாக இருந்துள்ளது.

Image result for Virat kohli child photos

இதனால் நண்பர்களுக்குள் அணி பிரித்துக்கொண்டு விளையாடும் போது, கோலி இருக்கும் அணிக்கு விளையாட மற்ற நண்பர்கள் அடம் பிடித்துள்ளனர். இந்திய அணியில் கோலி மீது இருக்கும் ஒரு விமர்சனம் அவர் தோல்வி வந்தால் டென்ஷன் ஆகிவிடுகிறார் என்பது. அது இப்போதல்ல அவர் தனது ஏரியா நண்பர்களுடன் விளையாடிய போதே, ஒரே ஒரு போட்டியில் தோல்வி என்றால் அன்று முழுவதும் கோலி முகத்தில் சிரிப்பை காண இயலாதாம். தொட்டில் பழக்கும் சுடுகாடு வரை என்பார்கள். அதுபோல ஏரியா பழக்கம் இந்திய அணி வரை கோலிக்கு இருக்கிறது. 

Image result for Virat kohli childhood photos

அவர் பள்ளி படிக்கும் போது பேட்டிங்கை பார்த்த அனைவரும் கோலியின் தந்தையிடம், உங்கள் மகன் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வருவான், அவனை நல்ல கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிடுங்கள். அவன் திறமையை வீணடித்து விடாதீர்கள் எனக் கூறியுள்ளனர். அதன்பின்னர் கோலி 9ஆம் வகுப்பில் கிரிக்கெட் பயிற்சி அளிக்ககூடிய தனியார் பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கும் கிரிக்கெட்டில் கோலி தான் கிங். அனைவருமே அவரது ரசிகர்கள் ஆகிவிட்டனர். படிப்பிலும் அவர் சிறந்து விளங்கியுள்ளார். இதனால் ஆசிரியர்களின் பேராதரவு பெற்ற மாணவனாக வலம் வந்துள்ளார் கோலி. 

Image result for Virat kohli childhood photos

அதன்பின்னர் இந்திய அணியில் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடி கோலி, தனது திறமையான ஆட்டத்தால் இந்திய அணியின் 19 வயது அணியின் கேப்டன் ஆனார். 2006ஆம் ஆண்டில் கோலி ரஞ்சி கோப்பையில் விளையாடும் போது அவரது தந்தை மறைந்தார். இந்த பெரும் இழப்புடனும் ரஞ்சிப் போட்டியில் பேட்டிங் செய்யச்சென்ற கோலி, அன்றைய தினம் 90 ரன்களை குவித்தார். ஆட்டம் முடிந்த தனது அறைக்கு சென்ற அழுத கோலியை இன்றும் மறக்க முடியாது என்கின்றனர் அன்று அவருடன் விளையாடிய சக வீரர்கள். இதன்பின்னர் இந்தியாவின் 19 வயது அணிக்கு கேப்டனான கோலி, 2008ஆம் ஆண்டு 19 வயது அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றார்.

Image result for virat kohli

அன்று மைதனாத்தில் கோலி போட்ட வெற்றிக்கொண்டாட்டம் ‘யாரு இவன் இவ்வளவு தேசப்பற்றுடன் வெறித்தனமா இருக்கான்’ என்ற கேள்வியை பலரையும் கேட்க வைத்தது. இதன்பின்னர் இந்திய அணியில் சேர்ந்த கோலி தனக்கென ஒரு இடம்பிடித்தார். ஒரு கட்டத்தில் தோனிக்குப் பின்னர் யார் கேப்டன் என்ற நிலை வந்த போது, பலர் ரோகித் ஷர்மாவை பரிந்துரைக்க, ஆனால் கோலி தனது திறமையால் பரிந்துரைகள் இன்றி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் தொடர் வெற்றிக் கேப்டனாக கோலி இருந்து வருகிறார். இடையே சில போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும், அனைத்து அணிகளையும் வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close