[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

“அனைத்திலும் கோலி பெஸ்ட்; ஆனால்...” - ராகுல், பாண்ட்யா உரையாடல்

virat-kohli-needs-to-go-on-a-holiday-says-k-l-rahul-and-pandya

கடின உழைப்பு, சிறந்த உடற்பயிற்சி என அனைத்திற்கும் விராட் கோலியை முன்னிலைப் படுத்திய ராகுல், பாண்ட்யா சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு வேறு பதிலை கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் வீரராக விராட் கோலி மாறியுள்ளார். அத்துடன் அனைத்து தொடர்களிலும் வெற்றிகளை குவித்து ஒரு சிறந்த கேப்டன் என்ற பெயரையும் கோலி பெற்று வருகிறார். அதேசமயம் கோலி என்ன சாதித்தாலும், அவரால் தோனியை நிகர் செய்யமுடியாது என தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். இதனால் தோனி மற்றும் கோலி ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் மோதல் ஏற்படுகிறது.

ஆனால் கோலியின் கோபங்கள் அவரது நற்பெயர் மீது அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆட்டம் எந்தச் சூழ்நிலையில் சென்றாலும், சற்றும் அசராது சிரித்த முகத்துடன் காட்சியளிப்பவர் தோனி. ஆனால் ஆட்டம் சற்று தடுமாற்றம் கண்டாலும், கடுப்பின் உச்சத்திற்கு சென்று நெருப்பை கக்கும் ட்ராகனாக மாறிவிடுவார் கோலி. அவரது வெறித்தனம் ரசிகர்களை ஈர்த்தாலும், அவருக்கு எதிரான கருத்துகளையும் சேர்த்துள்ளது. அதற்கு உதாரணமாக, கிரிக்கெட் ரசிகரை நாட்டை விட்டு வெளியேறச்சொல்லி ட்விட்டரில் கூறியது, பத்திரிகையாளர்களிடம் கோபத்தை காட்டியது, ஆஸ்திரேலிய வீரர்களுடன் சண்டைக்கு சென்றது ஆகியவற்றை குறிப்பிடலாம். 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இந்திய இளம் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டியளித்தனர். அதில் நெறியாளர் எழுப்பிய கேள்விகளும், அவர்கள் அளித்த பதில்களையும் காணலாம்.

நெறியாளர் : ஆஸ்திரேலிய தொடரில் யாரை ஓய்வெடுக்க பரிந்துரைக்கிறீர்கள் ?

ராகுல் : விராட் கோலி. அவர்தான் கூலாக வேண்டும். அவரிடம் நான் அதைக் கூறியுள்ளேன். அவர் பார்க்கலாம் என்றார். அவர்     விடுமுறையே எடுக்கமாட்டார். வேலை.., வேலை.., வேலை..! என்றே எப்போதும் இருக்கிறார்.

நெறியாளர் : உங்களுக்கு யார் உடற்கட்டு அறிவுரைகளை வழங்குவது ?

பாண்ட்யா : விராட் கோலி

நெறியாளர் : யாருக்கு சிறந்த கிண்டல் விருது வழங்குவீர்கள் ?

ராகுல் : விராட் கோலி

நெறியாளர் : யார் சிறந்த ரொமாண்டிக் வீரர் ?

ராகுல் : விராட் கோலி

நெறியாளர் : யார் சிறந்த கேப்டன் ?

பாண்ட்யா : மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில் நான் அறிமுகமானது பெருமை.

ராகுல் : ஆமாம்.. தோனிதான். அவர் சாதனை மனிதர்.

அனைத்துக் கேள்விகளுக்கும் விராட் கோலியை முன் உதாரணம் காட்டிய இருவரும், முக்கிய கேள்விக்கு தோனி என்று உண்மையைக் கூறி அனைத்து ரசிகர்களையும் நெகிழச் செய்துவிட்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close