[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

டெஸ்டில் தடுமாற்றம்: ஆஸி. ஒரு நாள் அணியில் அதிரடி மாற்றம்!

australia-make-wholesale-changes-bring-back-siddle-and-lyon-for-odis

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான வீரர்களை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக மாற்றியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டி20 தொடரை 1-1 என்று சமன் செய்த இந்திய அணி, இப்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னலையில் உள்ளது. சிட்னி தொடரிலும் இந்திய அணி வெல்லும் வாய்ப்பிருக்கிறது.


இதையடுத்து வரும் 12 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான 14 பேர் கொண்ட வீரர்களை ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவித்தது. இதில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மோசமான பார்ம் காரணமாக டிராவிஸ் ஹெட், டியார்ஸி ஷார்ட், கிறிஸ் லின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

8 வருடங்களுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில், ஒரு நாள் அணிக்கு திரும்பி யுள்ளார். பிக்பாஷ் போட்டியில் சிறப்பாக பந்துவீசிவருவதால் அவரை அணியில் சேர்த்துள்ளனர். அவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு சிட்னியில், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்றிருந்தார். உஸ்மான் கவாஜா, சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.


அணி விவரம்:

ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஸ்டோயினிஸ், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்), ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், ஜாசன் பெரன்டோர்ஃப், பீட்டர் சிடில், லியான், ஆடம் ஜம்பா.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close